Header Ads



ஹக்கீமுடைய அழைப்பை, சாய்ந்தமருது பள்ளிவாசல் நிராகரிப்பு


கல்முனை மாநகர சபையில் இணைந்து ஆட்சியமைக்க வருமாறு முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் றவூப் ஹக்கீம் விடுத்த கோரிக்கையை நிராகரித்தார் சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளிவாசல் தலைவர் வை.எம். ஹனீபா.

ஆட்சியின் பங்காளர்களாக மாறி பட்டம் பதவி பெறுவதற்காக எங்களுக்கு மக்கள் ஆணை வழங்கவில்லை மாறாக உள்ளூராட்சி மன்றத்தை வென்றெடுக்கவே எமக்கு மக்கள் வாக்களித்தனர் எனவும் உள்ளுராட்சி மன்றம் ஒன்றே எமது இலக்கு எனவும் அவர் குறிப்பிட்டார்.

இன்று மாலை 5.00 மணியளவில் சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளிவாசல் மக்கள் பணிமனையில்  இடம்பெற்ற ஊடக மாநாட்டில் கலந்துகொண்டு தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அத்துடன் வெற்றியடைந்த உறுப்பினர்கள் அனைவரினதும் கையெழுத்தும் பொது மக்கள் முன்னிலையில் எடுக்கப்பட்டு ஜும்ஆ பள்ளிவாசலின் இவ் வெற்றியை கொண்டாடும் முகமாக கேக் வெட்டப்பட்டு அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது.

(எம்.எம்.நியாஸ்)

7 comments:

  1. hahaha... paarkkalam...

    ReplyDelete
  2. Wait and see Mr. Slave of Hakeem!

    ReplyDelete
  3. Tell this to Dr Aarif Nagoor

    ReplyDelete
  4. Only cake cutting ??? that is also at Masjid..

    ReplyDelete
  5. இப்படி சுயேட்சையாக தேர்தலில் நின்றுதான் பிரதேச சபை என்ற இலக்கை அடையலாம் என்று இல்லை. இந்த நிலைப்பாடு ஒரு எதிர்மறைவானதாகவே இருக்கும் என்பது எமது கணக்கு. மந்திரி சபை அனுமதியில்லாமல் இதை பெற முடியாது. உண்மையில் இந்த இலக்கை நம்பிக்கையாளர் சபை; சுயேட்சை குழு மிகவும் சிக்கலாக்கி உள்ளார்கள் என்றே கருதுகிறோம். இந்த பிரதேச சபை ( இதன் அதிகாரம், நிதி நிலைமை, செயட்பாடுகள் போன்ற இன்னோரன்ன விடயங்களை கருத்தில் கொண்டால்) பிரச்சினை என்பது சாய்ந்தமருது மக்களுக்கு தலை மூழ்கி போகும் பிரச்சினை இல்லை (பிரிந்திருந்தாலும் சரி சேர்ந்திருந்தாலும் சரி). ஆனால் ஹாரிஸையும் ( இவரால் கல்முனைக்கும், முஸ்லிம்களுக்கும் எந்த பிரயோசனமும் இல்லை./ Political potent ) , ஹக்கீமையும் ( இலங்கை முஸ்லிம்களின் அரசியலையும், உரிமைகளையும் வியாபாரம் செய்து இருண்ட யுகத்துக்கு முன்னெடுத்து சென்றுகொண்டுள்ளார்) அரசியலில் இருந்து விரட்டுவதட்கு அல்லாஹ் சாய்ந்தமருதில் இருந்தே ஆரம்பித்துள்ளான் என்றே கருதுகிறோம். நிட்சயம் இதை ஏனைய முஸ்லிம்களும் முன்னெடுப்பார்கள் என்றே கருதுகிறோம். அடுத்து கவனிக்க வேண்டிய முக்கியமான விடயம் கல்முனைக்குடி, சாய்ந்தமருது ஒற்றுமை. மிகவும் பிரதானமாக கவனத்தில் கொல்லப்படுவதோடு, எதிர்கால சந்ததியினர் இதட்காக வழிநடத்தப்படவும் வேண்டும்..

    ReplyDelete
  6. இப்படி சுயேட்சையாக தேர்தலில் நின்றுதான் பிரதேச சபை என்ற இலக்கை அடையலாம் என்று இல்லை. இந்த நிலைப்பாடு ஒரு எதிர்மறைவானதாகவே இருக்கும் என்பது எமது கணக்கு. மந்திரி சபை அனுமதியில்லாமல் இதை பெற முடியாது. உண்மையில் இந்த இலக்கை நம்பிக்கையாளர் சபை; சுயேட்சை குழு மிகவும் சிக்கலாக்கி உள்ளார்கள் என்றே கருதுகிறோம். இந்த பிரதேச சபை ( இதன் அதிகாரம், நிதி நிலைமை, செயட்பாடுகள் போன்ற இன்னோரன்ன விடயங்களை கருத்தில் கொண்டால்) பிரச்சினை என்பது சாய்ந்தமருது மக்களுக்கு தலை மூழ்கி போகும் பிரச்சினை இல்லை (பிரிந்திருந்தாலும் சரி சேர்ந்திருந்தாலும் சரி). ஆனால் ஹாரிஸையும் ( இவரால் கல்முனைக்கும், முஸ்லிம்களுக்கும் எந்த பிரயோசனமும் இல்லை./ Political potent ) , ஹக்கீமையும் ( இலங்கை முஸ்லிம்களின் அரசியலையும், உரிமைகளையும் வியாபாரம் செய்து இருண்ட யுகத்துக்கு முன்னெடுத்து சென்றுகொண்டுள்ளார்) அரசியலில் இருந்து விரட்டுவதட்கு அல்லாஹ் சாய்ந்தமருதில் இருந்தே ஆரம்பித்துள்ளான் என்றே கருதுகிறோம். நிட்சயம் இதை ஏனைய முஸ்லிம்களும் முன்னெடுப்பார்கள் என்றே கருதுகிறோம். அடுத்து கவனிக்க வேண்டிய முக்கியமான விடயம் கல்முனைக்குடி, சாய்ந்தமருது ஒற்றுமை. மிகவும் பிரதானமாக கவனத்தில் கொல்லப்படுவதோடு, எதிர்கால சந்ததியினர் இதட்காக வழிநடத்தப்படவும் வேண்டும்..

    ReplyDelete
  7. Right nose cut to Business Man Hakeem.

    ReplyDelete

Powered by Blogger.