Header Ads



மன்னிப்புக் கேட்கும் வேட்பாளர்

வெலிகாமம், மதுராப்புர மக்களை இழிந்து, வெலிகம நகரசபைக்காக ஐக்கிய மக்கள் சுதந்திரம முன்னணியிலிருந்து போட்டியிடுகின்ற நஜிமுத்தீன் வெளியிட்டிருந்த துண்டுப்பிரசுரம், மதுராப்புர மக்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.

இதுதொடர்பில், மதுராப்புரயைச் சேர்ந்த ஒரு குழுவினர் நஜிமுதீனை ஒருவாறு கண்டுபிடித்து அவரிடம் தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டு, மீண்டும் துண்டுப்பிரசுரம் வெளியிடுமாறு சுமுகமான முறையில் கேட்டுள்ளனர். 

அதற்கேற்ப, நஜிமுத்தீன் தான் செய்த குற்றத்தை ஏற்றுக்கொண்டு இன்று (02) பகிரங்க மன்னிப்புக்கோரி, வெலிகமயிலுள்ள சகல பள்ளிவாயல்களிலும் ஜும்ஆத் தொழுகையின் பின்னர் துண்டுப்பிரசுரம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அத்துண்டுப் பிரசுரத்தில்,

“ என்னால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்ட துண்டுப்பிரசுரத்தில் மதுராப்புர சமுதாயத்தைப் பற்றி அறிவிக்கப்பட்ட செய்தியால் அச்சமுதாயமே வேதனையால் புண்படுகின்றது. நான் அறியாமையால் செய்ததையிட்டு அந்த மக்களிடம் மட்டுமல்லாது, முஸ்லிம் சமுதாயத்திடமும் முழுமனதுடன் மன்னிப்புக் கேட்கிறேன்.

மதுராப்புர மக்கள் மிகவும் கண்ணியத்துடன் வாழ்கிறார்கள். அதுமட்டுமன்றி, அவர்கள் பெருந்தன்மையுடனும் சகோதர மனப்பான்மையுடனும், சமூகத்திற்கு முன்னுதாரணமாகவும் வாழ்கிறார்கள். 

அப்படி ஒரு பெயர் மதுராப்புர மக்களுக்கு இல்லை என்றும், நாம் அனைவரும் முஸ்லிம்கள் என்பதையும், பிரிவினைகள் எமது மார்க்கத்தில் இல்லை என்பதையும் மிகவும் தெளிவுடன் தெரிவிக்கிறேன்.

அல்லாஹ்வுக்காக என்னை மன்னிக்குமாறு மிகவும் பணிவுடன் மீண்டும் வேண்டிக் கொள்கிறேன்” 

எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

MOHAMED FAIROOZ M I

No comments

Powered by Blogger.