February 25, 2018

ரணிலின் நரிப் புத்தி, பலிவாங்கப்பட்டாரா ஹிஸ்புல்லா..?

-ஏ.எச்.சித்தீக் காரியப்பர்-

ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த சிலருக்கான அமைச்சரவை மாற்றங்கள், புதிதாக ஓரிருவரை உள்ளீர்த்தல் போன்றன இன்று (25) நடந்துள்ளன.

இதன் போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் நரித் தந்திரம் ஒன்று அங்கு கச்சிதமாக அரங்கேற்றப்பட்டுள்ளது. அஜித் பி பெரேராவையும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, போதைப்பொருள் ஒழிப்பு, சமூக மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சராக நியமித்து இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வுக்கு இடையூறுகளை ஏற்படுத்தும் நோக்கில் பிரதமர் ரணில் செயற்பட்டுள்ளார்.(இங்கு பொறுப்புகள் வேறாக இருந்தாலும் ஒரே அமைச்சு என்பதனைக் கவனிக்கவும்)

அஜித் பெரோவுக்கு பதவி வழங்க வேண்டுமென்றால் வேறு ஓர் இராஜாங்க அமைச்சை வழங்கியிருக்கலாம். ஆனால், ஓர் இராஜாங்க அமைச்சர் இருக்கும் போதே அது அமைச்சுக்கு இன்னொரு ராஜாங்க அமைச்சரை நியமிப்பது நியாயப்படுத்த முடியாத விடயம் அல்லவா?

ஏற்கனவே, தனது அமைச்சில் தனக்கு அதிகாரம் இல்லை (பொதுவாக இராஜாங்க அமைச்சர்களுக்கான விடயதானங்கள் சரியாக வழங்கப்பட்டாமை) என ஹிஸ்புல்லாஹ் தெரிவித்து வரும் நிலையிலேயே ரணில் இந்தத் துரோகத் தனத்தைச் செய்துள்ளார்.

காத்தான்குடியில் அனைத்து வட்டாரங்களையும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கைப்பற்றியமை மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தின் மேலும் சில இடங்களில் இந்தக் கட்சிக்கு ஆசனங்கள் கிடைத்தமைக்காகவே இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வை பழிவாங்கும் ஒரு நோக்குடனேயே கன கச்சிதமமாக ரணில் இந்தக் காரியத்தை நடத்தி முடித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பைச் சேர்ந்த சில சிங்கள அமைச்சர்களுடன் ( ரணில் அதிருப்தி அணியைச் சேர்ந்தவர்கள்) நான் இன்றிரவு தொலைபேசியில் உரையாடிய போது, நான் கூறியவை தங்களுக்கும் சரி எனத் தோன்றுவதாகவே தெரிவித்தனர்.

இருப்பினும், விரைவில் இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதியினால் கூறப்பட்டுள்ள இன்னொரு அமைச்சரவை மாற்றத்தின் போது நிச்சயமாக இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் ‘ராஜா’ ஆவார் அல்லது வேறு ஒரு துறைக்கான இராஜாங்க அமைச்சு அவருக்கு வழங்கப்படும். அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுகளை அதிகரிப்பதில் உள்ள சட்டச் சிக்கல்களையும் கருத்தில் கொள்ள வேண்டும்

இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் விடயத்தில் இந்நாள், முன்னாள் ஜனாதிபதிகள் இருவரும் மிகக் கரிசனை கொண்டவர்களாகவே காணப்படுகின்றனர். அதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

ரணில் என்ற சாரதி இருக்கும் வரை யு.என்.பி என்ற வாகனத்தில் ஏறமாட்டேன் என மாமனிதர் மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ஃப் அவர்கள் சும்மாவா சொல்லிச் சென்றார்? 

6 கருத்துரைகள்:

Yes What this "Mamanither" did.He not only brought communal politics but also strengthened the anti Muslim SLFP. Whenever SLFP is in power Muslims are under attack. Srimao Bandaranayake,Chandrika Kumaranatunga,Mahinda and Now Maithripala too do the same.So it is because of Muslim congress UNP became powerless and SLFP and Mahinda who got 90% of Buddhist votes shows how dangerous is This SLFP+ Mahinda.

Execuse me...ivaru Parliament electionail WIN pannave illaye apram epdi ministry post...? Mr. writter...
You have to ask his party leader...! not the Ranil...

ஆனால் மடமையிலும் மடமையான மலைநாட்டு முஸ்லிம்கள் எப்போது கண் திறப்பார்களோ!?

அரசியல்வாதிகளின் நரித்தனம்,பொய்,புரட்டு,மாறுபாடு போன்றவை காரணமாக தனக்கு சேவையாற்ற காலம் இருந்த போதிலும் முன்னமே தான் ஓய்வு பெற்றதாக முன்னையநாள் மட்டக்களப்பின் உதவி அரசாங்க அதிபர் ஒருவர் மிகவும் கவலையாக என்னிடம் ஒருமுறை தெரிவித்தார். அத்தகைய நரித்தனத்துக்கு யாராவது பிரதியுபகாரம் செய்வதுதான் உலக அமைப்பின் போக்கு அல்லவா?

bro u r knowledge about politics is limited

கண்டிக்கு பிறகு முஸ்லீம் சமூகம் விழித்துக்கொண்டது ,நரியின் வேலை

Post a Comment