Header Ads



உள்ளூராட்சி தேர்தல், முஸ்லிம்களை பிரித்து வைத்துள்ளது - சேகு வேதனை

உள்ளூராட்சி சபைத் தேர்தலானது முஸ்லிம்களை குழுக்களாக பிரித்து வைத்திருக்கின்றது என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் தவிசாளர் சேகு இஸ்ஸதீன் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து ஓட்டமாவடியில் நேற்று இரவு இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து முஸ்லிம் பிரதேசங்களிலும் நடக்கின்ற உள்ளூராட்சி தேர்தல்கள் முஸ்லிம்களை துண்டாடிக் கொண்டிருக்கின்றன. வேறு வேறு குழுக்களில் வைத்துக் கொண்டிருக்கின்றது.

அது மிகவும் வேதனையான விடயம். உள்ளூராட்சியின் ஆட்சி அதிகாரங்களை சிறந்த முறையில் செய்ய வேண்டும் என்பதற்காக போட்டி நடைபெறுகின்றது.

இதன் விளைவாக முஸ்லிம்கள் பிளவுபட்டு விடக் கூடாது. முஸ்லிம்களின் பிரச்சினைக்கு முடிவு கட்ட வேண்டுமாக இருந்தால் நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.

இந்த நாட்டை ஆளும் அரசியலமைப்புச் சட்டத்திலே சில பிழைகள், தவறுகள், குறைபாடுகள் காணப்படுகின்றன.

தமிழர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் பிரச்சினைகள் காணப்படுகின்றது. ஆகவே இந்த அரசியலமைப்பு சட்டத்தை திருத்த வேண்டும் என்று இந்த நல்லாட்சி அரசாங்கம் தீர்மானித்தது.

நல்லாட்சி அரசாங்கம் மக்கள் சுதந்திரமாக நடமாடுவதற்கான ஏற்பாடுகளை செய்திருக்கின்றது. மஹிந்த ஆட்சிக் காலத்தில் முஸ்லிம்கள் மிகவும் பாதிக்கப்பட்டார்கள்“ என குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.