Header Ads



உலகிலேயே மிகவும் உயரமான ஹோட்டல், டுபாயில் திறக்கப்பட்டது


உலகிலேயே மிகவும் உயரமான ஹோட்டல் ஐக்கிய அரபு இராச்சியத்தின்  உள்ள டுபாயில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

உலகின் உயரமான கட்டடங்களுக்கு புகழ்பெற்றது டுபாய் நகரமாகும். இங்குள்ள புர்ஜ் கலிபா கட்டிடம் 828 மீட்டர் (2716 உயரமாகும். உலகிலேயே மிக உயரமான கட்டிடம் என பெயர் பெற்றுள்ளது இந்த கட்டடம்.

டுபாயில் இதுவரை உயரமான ஹோட்டலாக ஜே.டபிள்யு மரியாட் மார்குயிஸ் ஹோட்டல் இருந்து வந்தது. அதைவிட உயரமாக நேற்று  டுபாயில் மற்றொரு ஹோட்டல் திறக்கப்படுகிறது.

'ஜவோரா' என பெயரிடப்பட்டுள்ள இந்த ஹோட்டல் 75 மாடிகள் கொண்டது. தங்க நிற கோபுரத்துடன் அமைக்கப்பட்டுள்ள இந்த ஹோட்டல் 356 மீட்டர்  உயரம் கொண்டது. ஏறக்குறைய கால் மைல் தொலைவு உயரம் கொண்டதாகும்.

டுபாயில் உயரமான ஹோட்டல் என ஏற்கனவே பெயர் பெற்றுள்ள ஜே.டபிள்யு மாரியாட் மார்குயிஸ் ஹோட்டலைக் விடவும் ஒரு மீட்டர் உயரம் அதிகமாகும்.

டுபாயில் 333மீட்டர் உயரம் கொண்ட ரோஸ் ரெஹான் ஹோட்டலுக்கு அருகாமையில் ஜவோரா ஹோட்டல் அமைந்துள்ளது.

இந்த ஹோட்டலில் 528 அறைகள் உள்ளன. இந்த ஹோட்டலில் 4 ரெஸ்டாரண்ட்கள், திறந்தவெளி நீச்சல்குளம், சொகுசு குளியல் அறை, மசாஜ் அறை, தண்ணீரை பீய்ச்சி மசாஜ் செய்யும் வசதிகள் உள்ளன.

இந்த ஹோட்டலின் மிகச்சிறிய அறையின் அளவு 49 சதுர அடியாகவும், மிகப்பெரிய படுக்கை அறையின் அளவு 85 சதுர அடியாகவும் அமைக்கப்பட்டுள்ளது.

2020ஆம் ஆண்டுக்குள் ஆண்டுக்கு 2கோடி சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் திட்டத்துடன் ஐக்கிய அரபு இராச்சியம்சுற்றுலாத்துறையை மேம்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

..........

No comments

Powered by Blogger.