Header Ads



களுத்துறையின் அடுத்த, மேயர் யார்..?

முஸ்லிம் வாக்காளர்களைப் பெரும்பான்மையினராக கொண்ட களுத்துறை மாநகரசபையின் கடந்த வருடங்களில் முஸ்லிம்களே நகரசபையின் மேயர்களாக இருந்துள்ளனர். 

இம்முறை நடைபெற்ற தேர்தலில் 7 வட்டாரங்களில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி பெற்று இரண்டு போனஸ் ஆசனங்கள் உள்ளடங்கலாக மொத்தம் 9 ஆசனஙற்களையும், பொதுஐன பெரமுண ஆறு ஆசனங்களையும், சுதந்திரக் கட்சி 2 ஆசனங்களையும், மக்கள் விடுதலை முன்னணி ஒரு ஆசனத்தையும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக ஒரு ஆசனமும் பெற்றுக் கொண்டனர். 

இம்முறை களுத்தறை மாநகர சபைக்கான தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட பஸ்லான் பெரோஸ் (1040) கூடுதலா வாக்குகளை விகிதாசார அடிப்படையில் பெற்றுக் கொண்டுள்ளர். முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்ட களுத்தறை மாநகர சபைக்கு முஸ்லிம் ஒருவர், பஸ்லான் பெரோஸ் போன்ற ஒருவரே தெரிவு செய்யப்படுவதே மக்களின் ஏகோபித்த விருப்பாகவும் உள்ளது. 

ஐக்கிய தேசியக் கட்சி 8,605 வாக்குகளையும், பொதுஐன பெரமுண 6333 வாக்குகளையும், சுதந்திரக் கட்சி  1722 வாக்குகளையும், முதன்முதலாக களுத்தறை மாநகர சபைக்கு போட்டியிட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 907 வாக்குகளுடன் ஆசனம் ஒன்றையும் பெற்றுக் கொபண்டது குறிப்பிடத்தக்கது. 

இலங்கையின் சிறுபான்மையினர் பெரும்பான்மையா வாழ்ந்த இடங்களிலேயே ஐ. தே.க வென்றுள்ளதனால், அதன் மேயர்பதவிகளுக்கும் சிறுபான்மையினரிற்கு வழ்கப்பட வேண்டும் என்பதே மக்கள் விருப்பாகும். 

எம். பௌசர். களுத்துறை 

No comments

Powered by Blogger.