Header Ads



வருத்தம் தெரிவிப்பதாக, சாமர சம்பத் அறிவிப்பு

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்னிலையான ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவிடம் சுமார் இரண்டரை மணித்தியாலங்கள் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

பதுளை தமிழ் மகளிர் வித்தியாலயத்தின் அதிபரை அவமரியாதை செய்ததாக அவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான விசாரணைகளுக்கமைய அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஊவா மாகாண முதலமைச்சர், குறித்த சம்பவம் தொடர்பில்  தாம் வருத்தம் தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

இதுதவிர பதுளை தலைமை காவற்துறையின் பரிசோதகர் ஈ.எம்.டீ.பீ.வீ தென்னகோன் இன்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்னிலையானார்.

அவரிடமும் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.