Header Ads



ஐக்கிய தேசியக் கட்சியை, பரிசுத்தப்படுத்தும் தேவை ஏற்பட்டுள்ளது - ஹர்ச டி சில்வா

இம்முறை நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகளை அடுத்து ஐக்கிய தேசியக் கட்சியை பரிசுத்தப்படுத்தும் தேவை ஏற்பட்டுள்ளதாக ஹர்ச டி சில்வா வலியுறுத்தியுள்ளார்.

பிரதியமைச்சர் ஹர்ச டி சில்வா தொகுதி அமைப்பாளராக இருக்கும் ஶ்ரீஜயவர்த்தனபுர கோட்டே மாநகர சபையில் இம்முறையும் ஐக்கிய தேசியக் கட்சி எதிர்க்கட்சியாகவே வரமுடிந்துள்ளது.

கடந்த முறை கோட்டே மாநகர சபையின் அதிகாரத்தை கொண்டிருந்த சுதந்திரக் கட்சி இம்முறை அதனை மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆதரவு கட்சியான பொதுஜன பெரமுணவிடம் பறிகொடுத்துள்ளது.

இந்நிலையில் கோட்டே மாநகர சபையில் ஐ. ​தே.க. தோல்வி குறித்து பிரதியமைச்சர் ஹர்ச டி சில்வா தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ளார். குறித்த பதிவில் அவர் தேர்தல் தோல்விக்கான பரிகாரமாக ஐ.தே.க.வை பரிசுத்தப்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் கடந்த 2015 தேர்தல்களின் போது பொதுமக்களுக்கு வாக்களித்த எந்தவொரு விடயத்தையும் அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியக் கொள்கைகள் காரணமாகவே பெரும்பாலான இடங்களில் தமது கட்சி உள்ளூராட்சித் தேர்தலில் தோல்வியைத் தழுவ நேர்ந்துள்ளதாக பிரதியமைச்சர் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.