Header Ads



சக்திவாய்ந்த நில நடுக்கங்கள் ஏற்படலாம் - ஆராய்சியாளர்கள் கருத்து

அமெரிக்காவின் 2 விஞ்ஞானிகள் செய்த ஆய்வு முடிவுகள் உண்மையாகும் பட்சத்தில் இந்த ஆண்டு அதைத் தொடர்ந்து 5 அல்லது 6 ஆண்டுகளுக்கு சக்தி வாய்ந்த நில நடுக்கங்கள் பூமியில் அதிக அளவில் ஏற்படக்கூடிய சாத்தியம் உள்ளது.

கொலராடோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் ரோஜர் பில்ஹாம், மோன்டானா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் ரெபேக்கா பெண்டிக் ஆகியோர் நிலநடுக்கம் தொடர்பாக ஓர் ஆய்வினை மேற்கொண்டனர். அதில் கடந்த கால நில நடுக்கங்களையும் அவை ஏற்பட்ட சாத்தியக்கூறுகளையும் ஆய்வு செய்தனர். இதில் பூமி சுற்றிவரும் வேகத்துக்கும், தினசரி நாள் அளவுக்கும் நிலநடுக்கங்களுக்கும் தொடர்பு இருப்பதாக அவர்கள் கண்டறிந்துள்ளனர்.

பூமியின் சுழற்சி வேகம் எப்போதெல்லாம் குறைகிறதோ அப்போது நில அதிர்வுகள், நில நடுக்கங்கள் அதிகரிக்கின்றன. பூமியின் சுழற்சி வேகம் வழக்கத்தைவிட மைக்ரோ மில்லி செகண்டுகளே குறைகின்றன. இருப்பினும் அதன் தாக்கத்தால் சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன. குறிப்பாக பூமத்திய ரேகை பகுதியில் அமைந்துள்ள நாடுகளில் இதுபோன்ற நில நடுக்கங்கள் அதிகம் உண்டாகின்றன.

பூமியின் சுழற்சி வேகத்துக்கும் நில நடுக்கங்கள் ஏற்படுவதற்கும் உள்ள தொடர்பை ஆணித்தரமாகத் தீர்மானிக்க முடியாவிட்டாலும் அது ஓரளவு உண்மை. அதேபோல குளிர்காலங்களில் பகல்பொழுதுகள் குறையும்போதும் இதுபோன்ற நிலநடுக்கங்கள் அதிகம் ஏற்பட்டுள்ளன.

இனி வரும் காலத்திலும் இதுபோன்ற சம்பவங்கள் நிகழும். கடந்த 6 ஆண்டுகளில் ஏற்பட்ட நில நடுக்கங்களை ஆய்வு செய்ததில் 2018 மற்றும் அதனைத் தொடர்ந்து வரும் ஐந்தாறு ஆண்டுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்படுவதற் கான சாத்தியக் கூறுகள் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த ஆய்வு முடிவு புவியியல் ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் விவாதிக்கப்பட்டு வருகிறது.

No comments

Powered by Blogger.