Header Ads



ரணிலை நம்பலாம், மைத்திரியை நம்பமுடியாது - மஹிந்த

பிரதமர் ரணில் விக்ரமசிங்க வாய் மொழி மூலம் அளிக்கும் வாக்குறுதிளை கூட நம்பலாம் என்ற போதிலும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏழு ஆவணங்களில் கையொப்பமிட்டு அளிக்கும் உறுதிமொழிகளை மட்டும் நம்பவே முடியாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்களைச் சந்தித்த போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

சுதந்திரக் கட்சியுடன் இணைந்து உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைக்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியிடம் கோரிக்கை விடுக்கும் நோக்கில் சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் மஹிந்தவை சந்தித்திருந்தனர்.

இதன் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, ஜனாதிபதி மைத்திரியை கடுமையாக விமர்சிக்கும் வகையில் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.

“ரணில்கே கட்ட வச்சனே மட்ட விஸ்வாசய் ஏத், சிறிசேன கொல அத்தக்க லிவ்வத் விஸ்வாச நே” என்று மஹிந்த கூறியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டிய உறுப்பினர்கள் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியுடன் இணைந்து கொள்ளக்கூடிய சாத்தியம் உண்டு என தெரிவிக்கப்படுகிறது.

கூட்டு எதிர்க்கட்சியுடன் சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் இணைந்து கொள்ள பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.

No comments

Powered by Blogger.