February 06, 2018

“அதிகூடிய முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை” உறுதிசெய்வது காலத்தின் தேவை..!

தேசிய அரசியலில் மக்களின் அக்கறையின்மை, தேசிய நகர்வை அறியாத குறுகிய பிரதேசவாதச் சிந்தனை, முஸ்லிம் அரசில் தலைமையுடன் உடன்பாடின்மை, ஜமாத் அடிப்படையிலும்  பிரதேசரீதியாகவும் புதிய கட்சிகளை உருவாக்குவதில் உள்ள போட்டித்தன்மை, ஊழல் /வியாபார அரசியல் கலாசாரம், சில திட்டமிட்ட சதிகள், அரசியல் தீர்மானமெடுத்தல் பற்றிய நடைமுறைக்குப் பொருத்தமற்ற (மார்க்கரீதியான) வழிகாட்டல்கள் போன்ற பல காரணிகள் மூலம் இந்த உள்ளூராட்சி மன்றத் தோ்தலில் சுமார் 15 இலட்சம் முஸ்லிம் வாக்குகளும்  வீணடிக்கப்படும் அபாயம் தோன்றியுள்ளது.

இந்த இக்கட்டான நிலைமையை கவனத்தில் கொண்டு, குறிப்பாக  புதிய உள்ளூராட்சி தோ்தல்முறை தொடர்பாக  ‘முஸ்லிம் பிரதிநிதித்துவம் பாதுகாப்பப்பட வேண்டும்’ என்பதில் தொடர்ந்தும் குரல் கொடுத்துவரும் அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனம் அக்கறையுடன் இந்த விஷேட அறிக்கையை வெளியிடுகிறது.

பொதுவாக “கிராமத்துக்கான பிரதிநிதியை” தொிவு செய்யும் ஒரு தோ்தலாக உள்ளூராட்சி மன்றத் தோ்தல் இருந்தாலும், நாட்டில் பல்வேறு அரசியல் மாற்றங்களுடன் சுமார் 2½ வருடங்களுக்குப் பின்னர் நடைபெறும் இந்தத் தோ்தலானது நாட்டின் எதிர்கால அரசியலை மாற்றியமைக்கும் ஒரு முக்கிய தோ்தலாகும். எனவே இலங்கை வாழ் அனைத்து முஸ்லிம்களும் இனவாதமற்ற, அமைதியானதொரு இலங்கையை உருவாக்குவதை இலக்காகக் கொண்டு தமது வாக்குகளைப் பிரயோகிக்கக் கடமைப்பட்டுள்ளனர்.  

ஊழல் மோசடிகள் காரணமான அனைத்து முஸ்லிம்களுக்கும் களங்கம் ஏற்படுத்தி நாட்டில் முஸ்லிம்களின் இருப்புகுக்கும் அச்சுறுத்தலாக அமைந்துள்ள கட்சிகள் மற்றும் ‘முஸ்லிம் தேசியம்’ என்ற மாயையைக் கொண்டு இலங்கை முஸ்லிம்களை பிரிவினைவாதிகளாக அடையாளப்படுத்த முயற்சிக்கும் கட்சிகள் அல்லது ‘நாம் ஒரு இனவாதக் கட்சியல்ல’ என முஸ்லிம்களின் உரிமைக்காகக் குரல் கொடுக்கும் சக முஸ்லிம்களை இனவாதிகளாகக் காட்டிக் கொடுக்டும் கட்சிகளையும் முஸ்லிம்கள்  நிராகரிப்பது காலத்தின் தேவையாகும்.

“அதி கூடிய முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை” உறுதிசெய்வது இன்றைய காலத்தின் தேவையாகும், நல்லவர்களும், உலமாக்களும் தேசிய அரசியலிலிருந்து ஒதுங்கியிருக்கும் வேளை, ஒரு இஸ்லாமியன் சமூக உணர்வோடு இந்தத் தோ்தலில் களமிறங்கியிருந்தால் அவனை வெற்றிபெறச் செய்வதே எமது இலக்காக இருக்கவேண்டும். மாறாக, தத்துவம் பேசியோ, பிரதேசவாதம் பேசியோ அல்லது வாக்குகளைத் துண்டாடியோ எமது  பிரதிநிதித்துவத்தை நாமே குறைக்க முற்படுமிடத்து முஸ்லிம்கள் அரசியல் அநாதைகளாகக் கைவிடப்படும் அபாயம் உருவாகும்.

குறிப்பாக, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே வாழும் முஸ்லிம்கள் பிரதான தேசிய அரசியல் கட்சிகளுடன் இணைந்து செயற்பட வேண்டும் என்பதே காலத்தின் தேவையாகும். உங்களது பிரதேசத்தில் போட்டியிடும் தேசிய அரசியல் கட்சிகளுடனான உறவைப் பலப்படுத்துவற்கான சிறந்த சந்தர்ப்பம் இதுவாகும். ஆகவே வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை அடிப்படையாகக் கொண்ட பிராந்திய கட்சிகள் தென் பகுதியில் ஊடுருவி சக சிங்கள இன மக்களிடமிருந்து முஸ்லிம் மக்களை தூரப்படுத்த எடுக்கும் அனைத்து முயற்சிகளையும் மக்கள் தூரசிந்னையுடன் தோற்கடிக்க வேண்டும்.

தென் பகுதி முஸ்லிம்கள் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி எனும் ஒரு சில தொிவுகளுக்கு அப்பால் மக்கள் விடுதலை முன்னணி, இடது சாரிக் கட்சிகள் போன்ற சிறுபான்மை மக்களுக்காகக் குரல் கொடுக்கும் அனைத்துக் கட்சிகளுடனும் நெருங்கிய உறவை வைத்திருப்பதும் அவர்களுக்கான ஆதரவை வழங்குவதும் தேசிய ஒற்றுமைக்கும் சகவாழ்வுக்கும் ஓர் அடித்தளமாக அமையும் என நாம் நம்புகிறோம். ஆகவே, எமது அனைத்து வாக்குகளும் பயனுடையதாகவே அமைய வேண்டும்.

இந்தத் தோ்தலுக்கான வட்டாரப் பிரிப்பு மற்றும் உறுப்பினர் ஒடுக்கீட்டில் நாடளாவியரீதியில் முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டுள்ளதை நாம் நன்கு அறிவோம். இந்தத் தோ்தலின் பின்னர் அவை சீர்செய்யப்படும் என எமக்கு அரசாங்கம் வாக்குறுதியளித்துள்ளது. அதன்படி, அதற்கு வேண்டிய அனைத்து தகவல்களையும்  தொகுத்து வழங்குவதில் நாம் செயற்பட்டுவருகிறோம். 

எனவே உங்கள் பிரதேசத்தில் இந்த உள்ளூராட்சி மன்ற வட்டாரப் பிரிப்புடன் தொடர்பான குறைபாடுகள் ஏதும் இருப்பின் இந்த மாதத்தினுள் (2018 பெப்ருவரி) அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணி அலுவலக முகவரிக்குக் (ACUMLYF, KG 07, Elvitigala Mw, Colombo 08: தொ.பே. 0112 674 006) கிடைக்கச் செய்யுமாறு வேண்டிக்கொள்கிறோம். 

2 கருத்துரைகள்:

Can u bring all in party...?
When late leader dies, all cats wants to be the Raaja
They think themselves they r the one leaders of this tree.
This is the fact that they created lots of business parties....
Now you are talking about unity....They will?

ALL THESE FELLOWS ARE "MUNAAFIKKS".
TAKE CARE IN SELECTING THE CANDIDATE YOU WISH TO VOTE PLEASE, Insha Allah. LOOK AT THERE BACKGROUNDS AND CONNECTIONS OF THESE MUSLIM CANDIDATES. LOOK AT THERE WAY OF LIFE AND MAKE SURE THAT THEY HAVE A GOOD PEDIGREE. IF YOU FIND THAT THEY ARE DECEPTIVE, HOODWINK-ERS AND
DISHONEST GUYS WITH ULTERIOR MOTIVES AND ARE GETTING INVOLVED FOR PERSONAL BENEFITS AND GAINS - PLEASE DO NOT VOTE THEM, Insha Allah. IT IS BETTER TO VOTE A NON-MUSLIM THAN VOTING THESE "MUNAAFIKKS", Insha Allah.
"The Muslim Voice".

Post a Comment