February 27, 2018

உணவில் கருத்தடை, மாத்திரையை சேர்க்கலாமா..? (சிங்களவர் அறியவேண்டிய உண்மை)

-By Dr Ziyad-

இலங்கையில் நடைமுறையில் உள்ள கருத்தடை முறைகள்.

01. வாய் மூலம் உட்கொள்ளும் OCP எனப்படும் கருத்தடை மாத்திரை. (Eg:- mithuri) இதன் செயட்பாட்டு காலம் ஒரு நாள் மாத்திரமே.

02. Depot Injection எனும் ஊசி. 3 மாதம் கருத்தடை.

03. Jadelle என்னும் கையில் பதிக்கும் சிறிய tube ( 3 தொடக்கம் 5 வருட கருத்தடை )

04. IUCD எனும் கருப்பைக்குள் வைக்கும் சாதனம். (5 வருட கருத்தடை)

05. மேட்சொன்ன 4 உம் பெண்களுக்கு உரியது. இதட்கு மேலதிகமாக நிரந்தர கருத்தடை முறையான surgery செய்தல் (பெண்களுக்கு LRT, ஆண்களுக்கு Vasectomy) *ரொட்டி கொத்தில் இது சாத்தியமில்லை என்பதட்கான காரணங்கள்*


01. இங்கு *"වඳ බෙහෙත්"* எனும் சொல் பதம் சிங்களத்தில் "நிரந்தர கருத்தடை மாத்திரை" என்ற அர்த்தத்தில் பாவிப்பது. அலோபதி மருத்துவத்தில் அப்படி ஒரு மருந்தே இல்லை.
("கடல்லயே இல்லையாம்") நிரந்தர கருத்தடைக்கு ஒரே தெரிவு "Surgery" செய்வதே.

(குறிப்பு:- இதில் கருக்கலைப்பு என்பது வேறு. அது ஏற்கனவே உருவான கருவை கலைப்பது. அந்த மாத்திரையின் விலை மிக அதிகம். அதை சிங்களத்தில் "Gabsa" என்று கூறுவர். இங்கே பிரச்சினை அது அல்ல.)

இருக்கும் மாத்திரைகள் ஒரு நாளைக்கு கருத்தடை ஏட்படுத்துமே தவிர அதற்கு மேல் கிடையாது. அதுவும் இது பெண்கள் பாவிக்க வேண்டிய குழிசை. (28 நாள் card குழிசை போடுபவர்களுக்கு தெரியும்.)

2. எந்த ஒரு மருந்தும் 25°C க்கு கீழ் வைத்து பாதுகாக்க பட வேண்டும். (Recommended Temperature) 30- 35'C ஐ விட வெப்பநிலை தாண்டும்போது மருந்துகள் செயல் இழக்க ஆரம்பிக்கும்.

இதனாலேயே Pharmacy களை A/C பண்ணுமாறு அரசாங்கம் பணிக்கிறது. இது இப்படி இருக்க 100°C க்கு அதிக வெப்பநிலை உள்ள கொத்து ரொட்டியில் அது மருந்தாக இருக்காது.

3. தமிழை தாய்மொழியாக கொண்டவர்களால் கூட "கருத்தடை" எனும் சொல்லை பாவிக்கும்போது அதன் கருத்தை உடனடியாக விளங்குவது கடினம்.

அதை விட கடினமானது "වඳ බෙහෙත්" எனும் சிங்கள சொல் பதம். சிங்கள தாய்மொழி கொண்டவார்களே யோசித்து தான் விடை சொல்கிறார்கள். இது இப்படி இருக்க அச்சுறுத்தலில் கேட்கப்படும் கேள்விக்கு பயத்தில் தலை ஆட்டுவதை ஆதாரமாக காட்டி கலவரத்தை உண்டு பண்ணும் பின்னணி யோசிக்க வேண்டியது.

4.இந்த பிரச்சினை இன்று நேற்று வந்த பிரச்சினை அல்ல.

பல ஆண்டுகளாக முஸ்லிம்களையும் அவர்கள் வர்த்தகத்தையும் குறி வைத்து பரப்ப படுபவை.

பலருக்கு ஞாபகம் இருக்குமோ தெரியாது, பல அங்குகளுக்கு முன் BBS ஆல் கண்டியில் நடத்தப்பட்ட கூட்டத்தில் பகிரங்கமாக முஸ்லிம்களின் Hotel களுக்கு சென்றால் அங்கு வரும் அன்னியர்களுக்கு வழங்கப்படும் குடிநீரில் 3 முறை துப்பி விட்டுத்தான் கொடுப்பார்கள். அது அல்குரானில் சொல்லப்பட்டுள்ளது என்று பொய்யான விஷம பிரச்சாரம் பகிரங்க மேடையில் செய்யப்பட்டது.

5. இதன் உண்மை தன்மையை இலகுவாக PHI ஊடாக அறியலாம். பிரச்சினையை PHI க்கு அறிவித்தால் , அவர் ஸ்தலத்துக்கு ஆஜர் ஆகி குற்றம் சுமத்த படும் தூளை கைப்பற்றி அரச இரசாயன புகுப்பாய்வாளருக்கு அனுப்புவார். இதன்போது 2 sample கள் seal வைத்து பொதி செய்யப்படும். ஒன்று கடை உரிமையாளருக்கும், 2வது பகுப்பாய்வு திணைக்களத்துக்கும் அனுப்ப படும். இதில் துல்லியமாக என்ன அடங்கி உள்ளது என்பதை அறியும் தொழில் நுட்பம் இலங்கையிலேயே உள்ளது.

 இப்படி very simple methods இருக்கும்போது ஏன் இந்த கலவரம்.

அதேபோல் சமீபத்தில் சிங்கள வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான பால்மா ஒன்றை மக்கள் மத்தியில் அறிமுகம் செய்வதட்கு வீடு வீடாக சென்று Sample கொடுத்தார்கள். அதில் பல முஸ்லீம் பெண்கள் Sales rep ஆக இருந்ததால் அங்கு கருத்தடை மாத்திரை கலந்த பால்மா வழங்குவதாக police case வரை சென்றது. பின்னர் அது அந்நியரின் Company என்பதால் கை விடப்பட்டு மூடி மறைக்க பட்டது.

இப்படி நாட்டு நிலைமை இருக்கும்போது நடுநிலையாளர்கள் என்ற பெயரில் "கடை காரன் செய்து இருக்கலாம்" என்று சமூக வலை தளங்களில் பதிவுஇட்டு எரியும் இனத்துவேசத்துக்கு எண்ணெய் ஊற்ற வேண்டாம் என்பது எனது பணிவான வேண்டுகோள்.

Dr. A.I.A.ZIYAD
MBBS (Peradeniya)
MSc - Biomedical Informatics (Colombo)
Medical Officer | Health Informatics
Management Development & Planning Unit | Health Information Unit

9 கருத்துரைகள்:

Good explanation Mr Ziyad with the proof

It would be very useful if this article be published on all three languages in printed media.

Pls write this information n explanations in sinhala language because these misunderstanding must understand by them.

தேவையான தணிக்கைகள் செய்யப்பட்ட சிங்கள மொழி ஆக்கம்.

කොත්තු රොටි හරහා වඳ බෙහෙත් නොහොත් උපත් පාලන පෙති භාවිතා කරන්න හැකියාවක් තිබේද?

අද දවසේ කතිකාව මේ සම්භන්ධව දැනුවත් කිරීමයි.

ශ්‍රී ලංකාවෙ භාවිතා කරන උපත් පාලන ක්‍රම....

1) OCP -:
(Oral Contraceptive Pill ) එනම් මුඛයෙන් උපත් පාලන පෙති ගැනීමයි (උදා-: ,මිතුරි) . ඔසප් වු පලමු දිනසිට දිනපතා දවස් 21ක් භාවිතා කල යුතුයි. ප්‍රධානවම ඊස්ට්‍රජන් නමැති හෝමෝනය අඩංගු වේ.

2) ඩිපෝ එන්නත් විදීම -:
දරුවන් වැදීමෙ වයසේ සිටින කාන්තාවන්ට තෙමසකට වරක් මෙම එන්නත විදීමෙන් ගැබ් ගැනීම වැලක්විය හැක. ප්‍රධානවම ප්‍රොජෙස්ටරොන් නමැති හෝමෝනය අඩංගු වේ.

3) ජඩෙල් -:

කුඩා රබර් කැබැල්ලක් දරුවන් වදන වයසේ සිටින කාන්තාවන්ගේ වැලමිටට ඉහලින් සමයට තැන්පත් කරනු ලැබේ. වසර 3 සිට 5 දක්වා කාලයක් ගැබ් ගැනීම වැලැක්විය හැක. ප්‍රධනවම ලෙවනගැස්ට්‍රිල් නමැති හෝමෝනය අඩංගු වේ.

4) IUCD හෙවත් ලූපය -:

දරුවන් වදන වයසේ සිටින කාන්තාවන්ගෙ ගර්බාශයේ තැන්පත් කරනු ලැබේ.වසර 3 සිට 5 දක්වා කාලයක් ගැබ් ගැනීම වලක්වයි.

5) ස්තීර උපත් පාලන ක්‍රම -:
LRT කාන්තාවන්ට සිදු කරනු ලැබේ.මෙය කුඩා ශල්‍ය කර්මයකි.
Vasectomy පිරිමින් සඳහා සිදු කෙරෙ. මෙයද කුඩා ශල්‍ය කර්මයකි.

6) කොන්ඩම් -:
පිරිමි කොන්ඩම් සහ ස්ත්‍රි කොන්ඩම් වශයෙන් වෙලඳ පොලෙ ලබගත හැක. සංසර්ගයෙදි කොන්ඩම් භාවිතා කරනු ලබයි.

7) දින දර්ශන ක්‍රමය -:

ඔසප් චක්‍රයේ නිසරු කාලයේදි සංසර්ගයේ යෙදීම. මෙය පැරණිම උපත් පාලන ක්‍රමයයි.

කොත්තු රොටී මගින් උපත් පාලන පෙති හෝ ක්‍රම ප්‍රායෝගික නොවන්න හේතු...

1) වෛද්‍ය විද්‍යාවේ ස්තීර උපත් පාලන පෙති තවමත් සොයාගන්න අපොහොසත් වී ඇත. එකම ස්තීර උපත් පාලන ක්‍රමය වන්නෙ ශල්‍ය කර්මයයි ( LRT සහ vasectomy)

2) සියලු ප්‍රතිකාර පෙති වර්ග ගබඩා කරනුයේ සාමාන්‍ය කාමර උශ්නත්වයේය. එනම් 25 c°.
කාමර උශ්නත්වය 30- 35c° වඩා වැඩි වනවිට බෙහෙත් පෙතිවල ජීව ගුනය විනාශ වේ. බෙහෙත් සාප්පු ( phamacy) වායු සමීකරනය කර තිබිය යුතුයි යැයි රජය බල කරන්නෙ මේ නිසයි.
කොත්තු රොටී පිලියෙල කරන 100 c° වැනි අධික උශ්නත්වයකදී ඕනම බෙහෙතක ජීවගුනය විනාශ වේ.

3. "වඳ බෙහෙත්" හො "වඳ පෙති" යන වචන භාවිතා කරමින් එහි සත්‍ය සංකල්පය සිංහල දන්නා පුද්ගලයෙක් පවා පිලිතුරු දීමට දෙවරක් සිතනු නොඅනුමානයි.

4. අම්පාරේදි ඊයෙ දිනයෙදි ඇතිවූ තත්වයේදි... (PHI) මහජන් සෞඛ්‍ය පරීක්ශක තුමා විසින් මෙම ගැටලුව සරලව විසඳිය හැකිව තිබුනා.
ඔබට එවන් සැකයක් ඇතිවූයේ නම් වහාම PHI ට දන්වන්න. ඔහු සිද්දිය වූ ස්තානයට වහා වාර්තා කොට අවශ්‍ය පරීක්ශන සිදු කරනු ඇත.

இது ஒரு உளவியல் சார்ந்த தாக்குதல் இப்படியான விடயங்களில் மீண்டும் மீண்டும் (கட்டுரையாளர் Dr.A.I.A.Ziyad சொல்வது போன்று) எதிர் பிரச்சாரம் செய்யாது இருப்போமானால் இப்போது சிறுவர்களாக இருப்பவர்கள் எதிர் காலத்தில் விஸ்வரூபம் எடுத்து பிரச்சினைகள் தொடுக்க வாய்ப்புகள் இருக்கிறது அல்லாஹ் பதுகாப்பானாக அல்லாஹ் தந்த அறிவைக்கொண்டு நாமும் எதிர் பிரச்சாரம் செய்வோம்

Dr Ziad
The MOH Ampara has given a good explanation on this “VANDA PETHI” subject in the Kacheri Ampara.
GA, Department Heads, Clergies Security forces Parliamentarians and Public have attended after the incident.
Deputy Minister of Health also attended according to information.
The true side of this Myth should reach the whole country.
The best media for this is a well explained circular from the Ministry of Health to all Medical Officers of Health.
As you are from the Health Information Unit please convince the authorities to release such a circular.

Dr Ameenudeen
Pottuvil

Jazak Allah khair Dr ziyad

Post a Comment