Header Ads



முஸ்லிம்களின் வாக்கு வேண்டுமா? ஞானசாராவின் அறிவுரை இதோ...!

கூட்டு எதிர்க்கட்சியை சேர்ந்த சிலர் பொதுபல சேனா அமைப்பை அழிக்க முயற்சித்து வருவதாக அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் குற்றம் சுமத்தியுள்ளார்.

கொழும்பில் இன்று -15-  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

மதங்கள் தொடர்பான பிரச்சினைகள் தொடர்பில் ஆராய உடனடியாக ஆணைக்குழு ஒன்றை நியமிக்க வேண்டும். மோதிக்கொண்டு, திட்டிக்கொண்டு மாறி மாறி குற்றம் சுமத்திக்கொண்டு இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண முடியாது.

பொதுபல சேனாவை அழிக்க வேண்டும் என்று நினைக்கும் ஜீ.எல்.பீரிஸ் உட்பட சிலர் கூட்டு எதிர்க்கட்சியில் உள்ளனர். அதில் ஊடகவியலாளர்கள் சிலரும் உள்ளனர். இவர்களை நாங்கள் பிரிதொரு நாளில் தனித்தனியாக பார்த்துக்கொள்வோம்.

ஜீ.எல்.பீரிஸ் முஸ்லிம் பிரச்சினை தொடர்பாக எம்மீது குற்றம் சுமத்தும் முன் அவர் பெரிய கண்ணாடி முன் சென்று ஆடைகளை கலைந்து, இருக்க வேண்டியது இருக்கின்றதா என்பதை தடவி பார்த்துக் கொள்ள வேண்டும்.

ஆட்சியில் இருக்கும் காலத்தில் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணாமல், மக்கள் வாக்களித்த பின்னர், தலைவீங்கி, நித்திரையில் எழுந்தவர்கள் போல், கூத்தாட முயற்சிக்க வேண்டாம் என்று பீரிஸூக்கு கூறிக்கொள்கிறோம்.

அதேபோல் கூட்டு எதிர்க்கட்சி முஸ்லிம் வாக்குகளை எதிர்பார்த்து, நாங்கள் முன்வைத்து வரும் பிரச்சினைகளை கீழடிப்பு செய்ய முயற்சித்து வருகிறது.

ஞானசார தேரரையோ பொதுபல சேனாவையோ கால்பந்தாக பயன்படுத்த வேண்டாம். முஸ்லிம்களின் வாக்கு வேண்டுமாயின் முஸ்லிம்களின் பிரச்சினை தொடர்பிலான நிலைப்பாடு என்ன என்பதை பிரதான கட்சிகள் மற்றும் சிறுபான்மை கட்சிகளிடம் கேட்டறிய வேண்டும்.

அதேவேளை ஐக்கிய தேசியக்கட்சிக்கு நாட்டில் 34 இலட்சம் வாக்கு வங்கி உள்ளது. அது இம்முறை தேர்தலிலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த வாக்கு வங்கியுடன் சிறுபான்மை இன வாக்குகளினால் தமக்கு ஆட்சிக்கு வர முடியும் என்று ரணில் விக்ரமசிங்க நினைக்கின்றார். இதனால், உண்மையை அறிந்தும் அதற்கான முனைப்புக்களில் இருந்து வருகிறார்.

மறுபுறம் ரணில் விக்ரமசிங்க அரசியலமைப்புச் சட்டத்தை முன்வைப்பார். அப்போது மகிந்தவாதிகள், மகிந்த சிந்தனையில் இருப்பவர்கள், அவரை ஆதரிப்பவர்கள் அரசியலமைப்புச் சட்டதை கையில் எடுத்துக்கொண்டு அதிகாரத்தை வழங்க மாட்டோம் என கோஷமிட்டு, கடுமையாக விமர்சிப்பார்கள்.

எவரும் தீர்வை பற்றி பேச மாட்டார்கள். ரணில் கொண்டு வந்து போடும் தீர்வை பார்த்து, மேலும் விமர்சனங்களை முன்வைத்து சிறுபான்மை இன வாக்குகளை தூர விலக்கி வைத்து விடுவார்கள்.

நாங்களா, சிறுபான்மை இன மக்களின் வாக்குகள் கிடைப்பதை தடுக்கின்றோம்?. இந்த முட்டாள்களுக்கு இது புரியாதா?. இதனால், பிரிவினைவாதத்திற்கு வழங்கப் போகும் பதில் என்ன என்பதை இவர்கள் முன்வைக்க வேண்டும் எனவும் ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார்.

2 comments:

  1. தேர்தல் வாக்குகளுக்காகப்  பூட்டி வைக்கப்பட்டிருந்த  நாய்க்கூடு தேர்தல் முடிந்த கையோடு, எதிர்பார்த்தது போலவே திறந்துவிடப்பட்டு விட்டது!

    ReplyDelete
  2. ரனிலில் திட்டம் பேசுகின்றது

    ReplyDelete

Powered by Blogger.