Header Ads



"பிறந்தநாள் வாழ்த்துக்கள் (85) மிஸ்டர் சம்பந்தன்"


"பிறந்தநாள் வாழ்த்துக்கள் மிஸ்டர் சம்பந்தன். நாட்டின் முக்கிய பிரச்சினைகளுக்குத் தீர்வை எட்டும் முயற்சிகளுக்கு உங்களின் ஆதரவும் ஆலோசனையும் எப்போதும் தேவை. நீங்கள் நீண்டநாள் ஆரோக்கியமாக இருக்கவேண்டும். அரசியல் களத்தில் உங்களின் பங்களிப்புத் தொடர வாழ்த்துகள்.''

இவ்வாறு நேற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனுக்கு வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.

தேர்தல் சூறாவளிப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள நிலையிலும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு தொலைபேசியூடாகத் தொடர்புகொண்டு வாழ்த்தைத் தெரிவித்ததுடன், தற்போதைய தேர்தல் நிலைவரங்கள் குறித்தும் கருத்துப் பரிமாற்றம் செய்துகொண்டார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இராஜவரோதயம் சம்பந்தன் நேற்று தனது 85ஆவது பிறந்தநாளை திருகோணமலையிலுள்ள தனது இல்லத்தில் கொண்டாடினார். மிகவும் எளிமையாக பிறந்தநாளைக் கொண்டாடிய சம்பந்தன் திருமலையில் ஆலயங்களுக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார்.

நேற்றுக்காலைவேளையில் சபாநாயகர் கரு ஜயசூரிய, சம்பந்தனை தொலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்தினார். அதன் பின்னர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சம்பந்தனை தொடர்புகொண்டு வாழ்த்தினார்.

பிரதமரின் துணைவியார் மைத்திரி விக்கிரமசிங்கவும் சம்பந்தனுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.