Header Ads



பாராளுமன்றத்தைக் கலைத்தால் 62 பேரின், பென்சன் இல்லாமல் போகும்

நாடாளுமன்ற உறுப்பினர்களின் பென்ஷன் காரணமாக பதவிக்காலம் நிறைவடைவதற்கு முன்பாக நாடாளுமன்றத்தைக் கலைப்பது சாத்தியமில்லை என்று கூறப்படுகின்றது.

கடந்த 2015ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தல் மூலமாக 62 பேர் புதிதாக நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ளனர். ஐந்து வருடங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக பதவி வகித்தால் மட்டுமே இவர்களுக்கான பென்ஷன் கிடைக்கும்.

தற்போதைக்கு பெறும் சம்பளத்தில் மூன்றில் ஒரு பங்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஓய்வூதியமாக வழங்கப்படும்.

இந்நிலையில் புதிதாக நாடாளுமன்றத்துக்குத் தெரிவான உறுப்பினர்கள் தங்களின் பதவிக்காலம் நிறைவடைய முன்னர் நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கு ஆதரவளிக்க மாட்டார்கள் என்று கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

அதே ​போன்று ஐந்து வருட காலம் நிறைவடைய முன்னதாக ஜனாதிபதியும் நாடாளுமன்றத்தைக் கலைக்க முன்வரமாட்டார் என்றும் குறித்த ஊடக செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.