ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையின் கீழான தேசிய அரசாங்கத்தினை 2020ஆம் ஆண்டுவரை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்கு இன்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வெளியாகியுள்ள உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தல் முடிவுகளையடுத்து, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில், கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுடன், இன்று (11) அலரிமாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இது குறித்து தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறித்த தேர்தல் முடிவுகள் தேசிய அரசாங்கத்துக்கு வழங்கியுள்ள தகவலை அவதானத்தில் எடுத்துக்கொண்டு எதிர்வரும் நாட்களில் சில பல மாற்றங்களை ஏற்படுத்துவது தொடர்பான முடிவுகளை எடுப்பதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று அலரிமாளிகையில் கலந்துரையாடல் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
0 கருத்துரைகள்:
Post a Comment