Header Ads



157 அரசியல்வாதிகளுக்கு லஞ்சம் வழங்கிய சாராயக் கம்பனி - மைத்திரியின் கையில் பட்டியல்

இலங்கையின் பிரபல சாராயக் கம்பெனியொன்றிடமிருந்து பெருந்தொகைப் பணம் அரசியல்வாதிகளுக்கு லஞ்சமாக கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளது.

சமூக சேவைகள் மற்றும் சமூக வலுவூட்டல் பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க இன்று மேற்கண்ட தகவலை வௌியிட்டுள்ளார்.

கடந்த 04ம் திகதி வரை இலங்கையின் அரசாங்க மற்றும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் பலரும் மெண்டிஸ் சாராய உற்பத்திக் கம்பனியிடமிருந்து காசோலைகள் வழியாக பெருந்தொகைப் பணத்தை லஞ்சமாகப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

சுமார் 1.7 பில்லியன் ரூபா இவ்வாறு காசோலைகள் வழியாக 157 அரசியல்வாதிகளுக்கு லஞ்சமாக கொடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

குறித்த அரசியல்வாதிகள் தொடர்பான விபரங்கள் ஜனாதிபதிக்குத் தெரியும் என்பதுடன் அது தொடர்பான பட்டியலும் அவரிடம் இருக்கின்றது.

குறித்த பட்டியல் வௌிவந்தால் இன்னுமொரு அரசியல் நெருக்கடி நிலை ஏற்படும் என்றும் பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. IF THERE ARE MUSLIM MINISTERS AND MP's FOUND IN THE LIST, THE PRESIDENT HAS TO EXPOSE THESE DECEPTIVE, HIPPOCRATIC MUSLIM POLITICIANS TO THE HUMBLE MUSLIM VOTERS AND THE PAMARAMAKKAL IMMEDIATELY.
    "The Muslim Voice"

    ReplyDelete

Powered by Blogger.