Header Ads



கட்டார் அரச குடும்ப நகைகள், இத்தாலியில் திருட்டு


கட்டார் அரச குடும்பத்திற்கு சொந்தமான நகைகள் இத்தாலியின் வெனிஸ் நகரில் இடம்பெற்ற கண்காட்சி ஒன்றில் வைத்து திருடப்பட்டுள்ளன.

பொட்டி ஒன்றில் இருந்த பல நகை பொருட்களும் கடந்த புதன்கிழமை காலையில் திருடுபோயுள்ளது. இந்த பொருட்கள் பல மில்லியன் யூரோக்கள் பெறுமதியானதென நம்பப்படுவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

எனினும் பிரபலமான இந்த நகைகளை அப்படியே கறுப்புச் சந்தையில் விற்பது படினமாக இருக்கும் என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மொகலாய மற்றும் மஹாராஜாக்களின் பொக்கிஷங்கள் என்ற தலைப்பிலேயே 16 தொடக்கம் 20 நூற்றாண்டு காலத்து இந்திய இரத்தினக் கற்கள் சேர்க்கப்பட்டு இந்த கண்காட்சி நடத்தப்பட்டுள்ளது.

இது அல் தானியின் சேகரிப்பில் இருந்த நகைகள் என்பதோடு இவை கட்டார் மன்னர் குடும்பத்திற்கு உரிமையுடையதாகும்.

திருட்டு இடம்பெறும்போது கண்காட்சியகத்தின் பாதுகாப்பு முறை சரியாக இயங்கவில்லை என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளார். 

No comments

Powered by Blogger.