Header Ads



பலி கொடுக்கப்பட்ட ரவி, முக்கிய சூத்திரதாரிகள் தப்பினர், கண்ணாமூச்சி விளையாட்டு என கபே குற்றச்சாட்டு

பிணை முறிப்பத்திர விவகாரத்தில் முக்கிய சூத்திரதாரி மற்றும் திட்டமிட்டவர்கள் அனைவரும் இணைந்து, திலக்க மாரப்பன குழு ஊடாக, ரவி கருணாநாயக்கவை பலிக்கொடுத்து விட்டு, ஏனைய அனைவரும் தப்பியுள்ளனர் என கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் தெரிவித்துள்ளார்.

மாத்தறையில் இன்று -31- நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

ரவி கருணாநாயக்க, அர்ஜூன் அலோசியஸ் உடன் தொடர்புகளை கொண்டிருந்ததாக ஆணைக்குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதனால், அவர் ஏதேனும் நன்மைகளை பெற்றிருக்கலாம் என அனுமானிக்க முடியும்.

எனினும் பிணை முறிப்பத்திர விவகாரத்தில் முக்கிய சூத்திரதாரி மற்றும் திட்டமிட்டவர்கள் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் மற்றும் அவரது நெருங்கிய கூட்டாளிகள் என்பது தெளிவானது.

திலக் மாரப்பன குழு உண்மையான திருடர்களை காப்பற்றி விட்டு, ஐக்கிய தேசியக்கட்சியின் உப தலைவரை பலிக்கொடுத்துள்ளது. இது மிகத் தெளிவான தேர்தல் கண்ணாமூச்சி விளையாட்டு.

இலங்கை அரசியலில் உண்மையான திருடர்களும், அவர்களின் நெருங்கிய நண்பர்களும் இணைந்து தம்மை புலிகளாக மாற்றிக்கொண்டு, பூனைகளை பலிக்கொடுக்கும் முறையை உருவாக்கியுள்ளனர்.

இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட உண்மையான குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும். பிரதமர் மீதுள்ள நம்பிக்கை காரணமாகவா ஜனாதிபதி தொடர்ந்தும் மத்திய வங்கியை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் கீழ் வைத்திருக்க இடமளித்துள்ளாரா?.

இது குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெளிவுப்படுத்த வேண்டும் எனவும் கீர்த்தி தென்னகோன் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.