Header Ads



பிணைமுறி அறிக்கையால் ஐ.தே.க. மீது பழி விழாது, ஐ.தே.க. உறுப்பினர்கள் ஒருவரது பெயரும் அதில் இல்லை

எதிர்காலத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன குறித்து எந்தவிதமான சர்ச்சைக்குரிய கருத்தையும் வெளியிட வேண்டாம் என, ஐ.தே.க. அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவுறுத்தியுள்ளார். மேலும் ஸ்ரீல.சு.க. உள்ளிட்ட கூட்டணிக் கட்சி உறுப்பினர்களுடன் ஏதேனும் சர்ச்சைகள் இருந்தால் நேரடியாகப் பேசித் தீர்த்துக்கொள்ளுமாறும் அவர் கேட்டுள்ளார்.

கட்சித் தலைமையகமான சிறிகொத்தவில் நடைபெற்ற சந்திப்பொன்றின்போதே பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது, பிணைமுறி அறிக்கை குறித்து ஸ்ரீல.சு.க. உறுப்பினர்கள் சிலர் வலிய ஐ.தே.க. உறுப்பினர்களை தொடர்புபடுத்திப் பேசுவதாகவும் என்றபோதிலும் ஐ.தே.க. உறுப்பினர்கள் மிக அரிதாகவே அவற்றுக்கு பதிலளிப்பதாகவும் தெரிவித்தனர்.

இதன்போது பேசிய பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார், தாம் கூறிய கூற்று தவறாகப் புரிந்துகொள்ளவோ அல்லது தவறாக எடுத்துச்சொல்லவோ பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

தாம் ஜனாதிபதியை ஒருபோதும் ‘பிக்பொக்கெட் ஜனாதிபதி’ என்று தெரிவிக்கவில்லை என்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் இருந்து மைத்ரிபால சிறிசேனவை ஐ.தே.க. பிக்பொக்கெட் அடித்ததாகவே தாம் கூறியதாகவும் குறிப்பிட்டார்.

இதையடுத்துப் பேசிய பிரதமர், பிணைமுறி அறிக்கையால் ஐ.தே.க. மீது எவ்வித பழியும் விழப் போவதில்லை என்றும் ஐ.தே.க. உறுப்பினர்கள் ஒருவரது பெயரும் அதில் குறிப்பிடப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

2 comments:

  1. பதவி பறிபோய்விடுமென்ற பயமா?

    ReplyDelete
  2. பிணைமுறி விவகாரத்தில் ஐ.தே.க.எவ்வித பழியும் விழப் போவதில்லை.அதாவது ஐ.தே.க.அதன் தலைவர் முதல் அத்தனை உறுப்பினரும் சுத்தவாளிகள். இது அரபு மொழியில் تباقروا எனக் கூறுவது போல் இருக்கின்றது. அதாவது தானும் மாடாகி மற்றவர்களையும் மாடாக்கும் முயற்சியில் ஐ.தே.க. ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றது. அப்படியானால் இ்நத நாட்டு மக்கள் அனைவரும் எருமைமாடுகளா?

    ReplyDelete

Powered by Blogger.