Header Ads



பலாக்காய் அவித்து, எதிர்ப்பை வெளி­யிட்ட ஊழி­யர்கள்


(ஆர்.ராம்)

ஹம்­பாந்­தோட்டை துறை­முகம் சீனா­வுக்கு 99 வரு­டங்கள் குத்­த­கைக்கு வழங்­கப்­பட்­டுள்ள நிலையில் 2018ஆம் ஆண்டின் ஆரம்­ப­நா­ளான நேற்று திங்­கட்­கி­ழமை துறை­முக வளா­கத்தில் சீன நாட்டுக் கொடி முதற்­த­ட­வை­யாக உத்­தி­யோக பூர்­வ­மாக ஏற்­றப்­பட்­டது. துறை­முக அதி­கா­ர­சபை, இலங்கை நாட்டின் தேசியக் கொடி ஆகி­ய­வற்­றுடன் சீன நாட்டின் கொடியும் ஏற்­றப்­பட்­டி­ருந்­தது.

இதே­வேளை ஹம்­பாந்­தோட்டை துறை­மு­கத்­தினை அரச தனியார் கூட்டு வேலைத் திட்­டத்தின் கீழ் துறை­மு­கத்தின் செயற்­பாட்டு நட­வ­டிக்­கை­களை விரி­வு­ப­டுத்தி, அதனை அபி­வி­ருத்தி செய்­வ­தற்­கான இணை ஒப்­பந்தம் 2017ஆம் ஆண்டு ஜுலை மாதம் 29ஆம் திகதி கைச்­சாத்­தி­டப்­பட்­டது.

இவ்­வா­றான நிலையில் குறித்த ஒப்­பந்­தத்தின் ஊடாக தாம் தொழில் வாய்ப்­பினை இழக்க நேரிட்­டுள்­ள­தாகக் கோரி ஹம்­பாந்­தோட்டை துறை­முக ஊழி­யர்கள் 438பேர் தொடர்ச்­சி­யாக சத்­தி­யாக் கிரகப் போராட்­டத்­தினை ஹம்­பாந்­தோட்டை துறை­மு­க­வ­ள­ாகத்­திற்கு அருகில் முன்­னெ­டுத்து வரு­கின்­றனர்.

நேற்று திங்­கட்­கி­ழ­மையும் 42 ஆவது நாளாக முன்­னெ­டுக்­கப்­பட்ட சத்­தி­யா­க் கி­ரகப் போராட்­டத்தின் போது அதில் பங்­கெ­டுத்த ஊழி­யர்கள் புத்­தாண்டின் முதல் நாளில் பாற்­சோறு உண்­ணு­வ­தற்கு பதி­லாக பலாக்காய் அவித்து அதனை உண்டு தமது கடும் எதிர்ப்­பினை வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்­தனர்.

இது குறித்து ஹம்­பாந்­தோட்டை துறை­முக ஊழி­யர்கள் சங்­கத்தின் தலைவர் உமேஷ் தெரி­விக்­கையில், நாம் ஹம்­பாந்­தோட்­டையை பூர்­வீக­மாக கொண்­ட­வர்கள். இங்கு துறை­முகம் அமைக்­கப்­பட்­ட­மையின் கார­ணத்­தா­லேயே எமது வாழ்­வா­தா­ரத்தில் முன்­னேற்றம் ஏற்­பட ஆரம்­பித்­தது. நாம் தொழில் வாய்ப்­புக்­களைப் பெற்­றி­ருந்தோம். ஆனால் தற்­போது சீனா­வுக்கு துறை­மு­கத்தை அர­சாங்கம் தாரை­வார்த்­துள்­ளது. இதனால் 438பேர் தொழில் வாய்ப்­புக்­களை இழந்து வீதியில் நிற்­கின்றோம்.

438பேர் தொழில்­வாய்ப்­புக்­களை இழந்து நிற்­கின்­ற­மையால் இந்தப் பிர­தே­சத்தில் உள்ள 438குடும்­பங்­களின் நிலைமை பரிதாபகரமாக உள்ளது.

இது­வ­ரையில் எமது பிரச்­சி­னைக்கு எந்­த­வி­த­மான தீர்­வி­னையும் வழங்­கு­வ­தற்கு அர­சாங்கம் முன்­வ­ர­வில்லை. நியா­ய­மான தீர்வு கிடைக்கும் வரையில் எமது போராட்டம் தொடரும் என்றார்.

No comments

Powered by Blogger.