Header Ads



முதல் சம்பவம் இதுவாகும்..

ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவை சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழு நாளை விசாரணைக்கு அழைத்துள்ளது.

பதுளை தமிழ்ப் பெண்கள் பாடசாலையின் அதிபர் பவானி ரகுநாதனை, முழந்தாளிட்டு மன்னிப்புக் கோர வைத்த சம்பவம் தொடர்பான விசாரணைக்கே ஊவா மாகாண முதலமைச்சர் மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் அழைக்கப்பட்டுள்ளார்.

இலங்கை ஆசிரியர் சேவைகள் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் மற்றும் கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் ஆகியோர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில், சாமர சம்பத் தசநாயக்கவிடம் இந்த விசாரணை நடத்தப்படவுள்ளது.

தேர்தல் பரப்புரைகளில் பங்கேற்கவுள்ளதால், நாளை விசாரணைக்கு சமூகமளிக்க முடியாதிருப்பதாகவும், வேறோரு நாளில் முன்னிலையாவதாகவும் ஊவா முதலமைச்சர், மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அறிவித்திருந்தார்.

ஆனால், அதனை ஏற்றுக் கொள்ள மறுத்துள்ள மனித உரிமைகள் ஆணைக்குழு, நாளை அவர் கண்டிப்பாக முன்னிலையாக வேண்டும் என்று அறிவித்துள்ளது.

சிறிலங்காவின் மாகாண முதலமைச்சர் ஒருவர் மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ள முதல் சம்பவம் இதுவாகும்.

No comments

Powered by Blogger.