Header Ads



கொழும்பில் பெண்களை அவமதிக்கும் விளம்பரம் - ஹர்ஷ சீற்றம்

ராஜகிரியவில், பெண்களை அவமரியாதைப்படுத்தும் வகையில் பொருத்தப்பட்டுள்ள பதாகையை அகற்றுமாறு பிரதியமைச்சர் ஹர்ஷ டி சில்வா அறிவுறுத்தியுள்ளார்.

பிரபல உடற்பயிற்சிக் கூடத்தின் இந்த விளம்பரப் பதாகையில், பீப்பாய் ஒன்றின் படம் பொறிக்கப்பட்டுள்ளதுடன், “இது பெண்களுக்குரிய தோற்றம் அல்ல” என்ற வாசகமும் பொறிக்கப்பட்டுள்ளது.

பேச்சுவழக்கில் சொல்வதானால், பெண்கள் ‘பெரல்’ போல் இருக்கக்கூடாது என்பதாக இந்த விளம்பரம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த விளம்பரம் குறித்து ட்வீட்டியிருக்கும் பிரதியமைச்சர், பெண்களை அவமதிக்கும் இதுபோன்ற விளம்பரங்களை கோட்டையில் அனுமதிக்க மாட்டேன். இந்த விளம்பரப் பதாகையை அகற்றுமாறு நகர சபையிடம் கோரியுள்ளேன் எனத் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. barrel போல் இருக்க வேண்டாம் என்று தானே சொல்கிறார்கள்... அமைச்சர் தனிப்பட்ட ரீதியில் பாதிக்கப்பட்டிருப்பார் போல....நாட்டில் எத்தனையோ பிரச்சினை இருக்க இது தான் இவர் கண்ணுக்கு தெரிந்திருக்கு.....

    ReplyDelete

Powered by Blogger.