Header Ads



மைத்திரியின் ஆசையினால், மெய்சிலிர்த்த மஹிந்த


(எம்.மனோசித்ரா)

5 வருடங்கள் போதாது எனக்கூறி தனது பதவிக் காலத்தை 6 வருடங்களாக அதிகரிக்க ஜனாதிபதி முயற்சித்தமை மெய்சிலிர்க்க வைத்துவிட்டதென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

பதவி ஆசை  எனக்கு தான்  என கூறினார்கள். எனினும் நான் இரண்டு வருடங்கள் பதவிக் காலம் மீதமிருந்தும் ஆட்சியை ஒப்படைத்து விட்டேன்.  

ஆனால் தற்போது 5 வருடங்கள் போதாது எனக் கூறி தனது பதவிக் காலத்தை 6 வருடங்களாக அதிகரிக்க ஜனாதிபதி முயற்சித்தார். எனினும் அது சாத்தியப்படவில்லை.

மக்களால் ஏற்பட்ட தவறினை அவர்களாகவே திருத்திக் கொள்வதற்கு மீண்டும் ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. 2015 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி மைத்திரிபால சிறிசேனவிற்கு வாக்களித்து மக்கள் செய்த பாரிய பிழையை திருத்திக் கொள்வதற்கு நடைபெறப்போகும் உள்ளூராட்சிமன்ற  தேர்தல் ஒரு சிறந்த வழியாகும். 

இத் தேர்தலில் மக்கள் சிந்தித்து வாக்களிப்பார்களானால் தற்போதுள்ள பழி வாங்கும் அரசாங்கத்தை மாற்றியமைக்கலாம்.

மேலும், இலங்கையின் அரசியல் வரலாற்றில் தற்போதுள்ள அரசாங்கத்தைப் போன்ற பழி வாங்கும் அரசாங்கம் இது வரையில் இருந்ததில்லையெனத் தெரிவித்தார். 

கடுவலையில் இடம்பெற்ற தேர்தல் பிரசாத்தின் போதே முன்னாள் ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.