Header Ads



அபாயவை கழற்றிவிட்டு, சாரி உடுத்துங்கள் - முஸ்லிம் ஆசிரியைகள் வேதனை


இவ்வருடத்திற்கான ஆசிரியர்  இடமாற்றங்கள் நடந்துவருகையில், முஸ்லிம் ஆசிரியைகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் நெருக்கடிகளை எதிர்கொள்வதாக வேதனை வெளியிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே தாம் பணியாற்றிய பாடசாலைகளில் அபாயாவுடன் பணியாற்றிய ஆசிரியைகள், புதிதாக இடமாற்றம் பெறும் பாடசாலைகளுக்கு அபாயா அணிந்து செல்லுகையில், அபாயாவை கழற்றிவிட்டு சாரி அணிந்து வரும்படி அவர்கள் வலியுறுத்தபட்டுள்ளனர்.

இதனால் சில முஸ்லிம் ஆசிரியைகள் வீட்டிங்குள் முடக்கப்பட்டுள்ளனர்.

தம்மால் அபாயாவை கழற்றிவிட்டு, சாரி அணிந்து கற்றபித்தல் செயற்பாடுகளில் பங்கேற்க முடியாதென அவர்கள் உறுதிப்பாட்டுடன் உள்ளனர்.

கொழும்பு, கம்பஹா மற்றும் குருநாகல் மாவட்டங்களில் இருந்து இதுபற்றிய முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.

இந்நிலையில் முஸ்லிம் அரசியல்வாதிகள், முஸ்லிம் அமைப்புக்கள் இதுபற்றி கல்வியமைச்சருக்கு தெளிவுபடுத்தி,  முஸ்லிம் ஆசிரியைகள் அபாயா அணிந்து பாடசாலைக்கு செல்வதை உறுதிப்படுத்த சுற்றுநிருபங்களை சகல பாடசாலைகளுக்கும் அனுப்பி, தமது உரிமையை உறுதிப்படுத்தி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பாதிக்கப்பட்ட ஆசிரியைகள் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

3 comments:

  1. குறையுள்ள ஆடை அணிய அவரவர் வீட்டுப்பெண்களை பணிக்கலாம், இஸ்லாமிய பெண்கள் நிறைவான ஆடையை அணிகிண்றனர்.

    ReplyDelete
  2. யாரையும் யாரும் வற்புறுத்த முடியாது.

    ReplyDelete
  3. முகமும் கரங்களும் தவிர ஏனைய உறுப்புகளை மறைத்திருக்கும் எந்தப் பெண்களும் மரியாதைக்கு உரியவர்களே.
    தவிர, அவர்களை விமர்சித்து, விவாதித்து, குறை கண்டு எவராலும் வெல்லவும் முடியாது.

    ReplyDelete

Powered by Blogger.