January 04, 2018

சுவனம் நிச்சயமான ஒரு, வீரத் தளபதியின் கடைசி வார்த்தைகள்....!

அழகிய மெல்லிய வாகான உயரமான வசீகர முகம் கொண்ட தீட்சண்ய கண்களிற்கு சொந்தக்காரர் அவர். அன்றைய அரபிகளிளேயே அழகாக உடையணிபவர். குறைஷ் வம்சத்தை சார்ந்த அவர் எல்லோராலும் அவரது அடக்கமான நடத்தைக்கும், அதீதமான வீரத்திற்கும் போற்றப்பட்டவர்.

அபூபக்கர் ரலியல்லாஹுஅன்ஹுவின் கரங்களில் இஸ்லாத்தை ஆரம்பத்திலேயே ஏற்றவர். அபீஸீனியா, யத்ரிப் என இரண்டு ஹிஜ்ரத்களை மேற்கொண்டவர். சுவனத்திற்கு இறைவன் தேர்ந்து கொண்ட 10 பேரில் ஒருவர். நபியின் தளபதி. பின் அபூபக்கரின் தளபதி. அதன் பின் உமரின் சீஃப் கொமாண்டர்.

இஸ்லாத்தின் எழுற்ச்சிக்கா களம் பல கண்டவர். கிலாபாவின் வரலாற்றை வாள் முனையில் எழுதியவர். தனது தோழர் காலித்துடன் இணைந்து இஸ்லாமிய அரசின் எல்லைகளை தங்கள் கால்கள்பட்ட இடங்களில் எல்லாம் நிலைநாட்டியவர், இஸ்லாமிய இராணுவ வரலாற்றின் பெருந்தளபதி “அபூ உபைஃதா இப்னு அல் ஜர்ராஹ்” ரலியல்லாஹுஅன்ஹு.

ஜெரூஸலம் கைப்பற்றப்பட்ட போது, அதன் சாவியை அமீருல் முஃமினீனிடமே கொடுப்போம் என்ற குஃபாரின் கோரி்க்கைக்கு இணங்க உமர் ரலியல்லாஹுஅன்ஹு அவர்கள் அங்கு வந்த போது அதனை கைப்பற்றிய அபூ உபைஃதா இப்னு ஜர்ராஹ் ரலியல்லாஹுஅன்ஹு அவர்களிடம் உமர் சொன்னார் “நன்றி எனக்காக இதனை செய்ததற்கு” என்று.

அபூ உபைஃதா அந்த அமீருல் முஃமினீனின் நன்றியை ஏற்றுக்கொண்டு பதில் சொன்ன போது “உமரே..! நான் இதனை உங்களிற்காக செய்யவில்லை, இஸ்லாத்திற்காகவே செய்து முடித்தேன், உங்களிற்காக செய்திருந்தால் ஒரு நாளும் ஜெரூஸலத்தை எவராலும் வெற்றி கொள்ள முடியாது ” என்று. உமர் அந்த இடத்திலேயே மிக நீண்ட நேரம் ஸஜ்தா செய்தார். பின் அபூ உபைதாவின் கன்னத்தில் முத்தமிட்டுவிட்டு எதுவும் பேசாமல் மதீனா நோக்கி புறப்பட்டு விட்டார்.

இரண்டு புதல்வர்கள். முதலில் மகன் யஷீத் மரணித்தார். அதையடுத்து மகன் உமைர் மரணித்தார். சைல்ட்ஹுட் டெத்ஸ்.

காலி்த் அவரது பிள்ளைகளின் மரணத்தின் வலி பற்றி கேட்ட போது அபூ உபைஃதா சொன்னார் “இந்த வலிகளை விடவும் என் கண் முன்னே வெட்டி சாய்க்கப்படும் இஸ்லாமிய இராணுவத்தின் இரண்டு சோல்ஜர்களின் மரணம் எனக்கு கொடுமையளிப்பது” என்று. திஸ் இஸ் தி மைன்ட் செட் ஒஃப் இஸ்லாமிக் கொமாண்டர்ஸ்.

ஜபலியா நோக்கி படைகளை நகர்த்திய போது கொள்ளை நோய் (பிளேக்) அவரை தாக்கியது. படைகளை நோய் தாக்கிவிடும் என்ற அச்சத்தில் மலைகளிற்கு அப்பால் கொண்டு சென்று நிறுத்துமாறு கட்டளையிட்டார். அதற்கு முன் தன் இராணுவத்தை அணிவகுத்து சிரமத்துடன் பேசினார்.

“தொழுகையை உறுதியாக கடைப்பிடியுங்கள். ஸகாத்தை நிறைவேற்றுங்கள். ஹஜ்ஜையும் உம்ராவையும் நிறைவேற்றுங்கள். உங்களிற்குள் ஒற்றுமையாக இருங்கள். உங்கள் தளபதிகளிற்கு உண்மையாக இருங்கள். அவர்களிற்கு எதையும் மறைக்காதீர்கள். உலகத்தை அழிக்கும் யுத்தங்களை புரியாதீர்கள். நான் இப்படித்தான் இருந்தேன். நீங்களும் அப்படியிருப்பீர்கள் என நம்புகிறேன் இன்ஷாஅல்லாஹ்..”

“இந்த நிமிடம் முதல் முஆத் இப்னு ஜபலை தளபதியாக நியமிக்கின்றேன். அவர் போர்த்தளபதியாகவா என நீங்கள் மனதில் வினா எழுப்பலாம். யுத்தங்களிற்கெல்லாம் தலையாயது தொழுகை. அவர் சிறந்த இமாம் தொழுகையை தலைமையேற்று நிறைவேற்ற. எந்த இராணுவம் தொழுகை்ககாக அணிவகுக்கிறதோ அதுவே வெற்றிகரமான இராணுவம். முஆத் அதனை செய்வார். என்னை விடவும் அழகாகவே”.

அந்த பெருந்தளபதியின் கம்பீரமிக்க கடைசி வார்த்தைகள் இவை. தனது ரப்பு தனக்கு வாக்களித்த ஜன்னதுல் பிர்தவ்ஸை நோக்கிய அவருடைய பர்ஸக்கின் பிரயாணம் ஆரம்பமானது. ஜஸ்ட் 57-ஆவது வயதில்.

இன்றும் ஜோர்தானில் அவர் மண்ணறையுள்ளது. ஆனால் அது மண்ணறையாக இல்லாமல் கல்லறையாக கட்டப்பட்டு தர்காவாக. ஸோ ஸேட்.

-Abu Maslama-

2 கருத்துரைகள்:

ஸோ ஸேட் ???

May almighty Allah provide this die-hard companion of our beloved prophet, his unrivalled rewards & loftist stations in jannathul firdouse for his devotion to Islam! Aameen.

Post a Comment