Header Ads



ஜப்னா முஸ்லிம் இணையத்தில் வந்த, விமர்சனத்திற்கு பதில்

தெல்தோட்டைக்கு தண்ணீர், காட்டுவது ஏன்..?  விமர்சனமும் நிதர்சனமும்

ஊடகவியலாளர் எஸ்.என்.எம். ஸுஹைல் அவர்களே 1991 தெடக்கம் 2015 வரை தெல்தோட்டைக்கு எவ்வாறான ஏமாற்றங்கள் இடம்பெற்றதாக நீங்கள் கூற வருகின்றீர்கள்? என பெயர் விபரமில்லாத சகோதரர் ஒருவர் கேள்வியெழுப்பி "உமது சகோதரர் ஜே.வி.பி. வேட்பாளராக அதே வட்டாரத்தில் போட்டியிடுவதால் இவ்வாறான பொய் பிரச்சாரங்களை மேற்கொண்டு வாக்குகளை கொள்ளையடிக்க நினைக்கின்றீர்களா?" என்றும் ஜப்னா முஸ்லிம் இணையத்தளத்திற்கு அளித்திருந்த பின்னூட்டு வினா தொடுத்திருந்தார்.

கடந்த 8 வருடங்களாக பல வகையிலும் தெல்தோட்டையில் இடம்பெறும் அபிவிருத்திப் பணிகள் குறித்து செய்தி அறிக்கையிட்டிருக்கிறேன். 
அத்தில், தெல்தோட்டை பிரதேசத்திற்கான நீர் வழங்கல் திட்டத்தை ஆரம்பிப்பதற்கான ஆரம்பிப்பது, அதற்கான தடைகள் குறித்தும், எதிப்பு ஆர்ப்பாட்டம் குறித்தும் கூறியிருந்தேன். எதிராக செயற்படுபவர்களை சமாளிக்க தெரியாததன் விறைவே இன்று பெண்களும் சிறுமிகளும் குடம் தூக்கி இடுப்பு உடையும் நிலைமைக்கு ஆளாகியிருக்கின்றனர். (முஸ்லிம் குடியேற்றம், பத்தாம்பள்ளி, பியசேனபுர உள்ளிட்ட பகுதியின் அவலம் யார் அறிவார்? வீடுவீடாக சென்று கேட்டுப்பாருங்கள் ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு கண்ணீர் கதைகள் இருக்கும். 

பத்தாம்பள்ளி பிரதேசத்திற்கு 1 இலட்சம் ரூபா செலவில் நீர் விநியோகம் செய்துகொடுக்கப்பட்டுள்ளது. கட்டாயம் அப்பிரதேசத்தில் வசிக்கும் மக்களிடம் இது சம்பந்தமாக கேட்டுப்பாருங்கள் என அந்த முகவரியில்லா சகோதரர் கூறியிருந்தார். 2000 ஆம் ஆண்டுகளில் அவ்விநியோகத் திட்டம் வழங்கப்பட்டதாக நினைவிருக்கிறது? ஆனால், ஏன் இன்னும் அங்கு நீர் தட்டுப்பாடு இருக்கிறது? ஏன் இன்னும் மக்கள் அவலத்துக்குள்ளாகின்றனர்? அபிவிருத்தித்திட்டமென்பது வெறும் கண்துடைப்புக்காக அமையக்கூடாது. நிலைத்து நீடிக்க வேண்டும். அவ்வாறான நிலையிலேயே சமூகம் நண்மையடையும். அப்படியாயின் 2000 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட திட்டத்தை எந்த கோணத்தில் நாம் பார்ப்பது?

தலாதோயாவில் இருந்து தெல்தோட்டைக்கு பிரதேச சபையை கொண்டுவருவதற்கு மிக முக்கிய பங்கை தலைவர் ரவூப் ஹக்கீம் மேற்கொண்டார். அதற்கான யோசனையை அபிவிருத்திக்குழு கூட்டத்தில் முன்வைத்தமைக்கு பாராட்டு தெரிவிக்க வேண்டும்.

2005 ஆம் ஆண்டு எனசல் கொல்லை ம.க. க்கு 3 மாடி கட்டிடம். முழுமையாக அமைச்சர் ஹக்கீமின் நிதி ஒதுக்கீட்டிலேயே இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டமை வரவேற்கத் தக்கது. 

 2017 ஆம் வருடம் தெல்தோட்டை முஸ்லிம் மத்தியக் கல்லூரிக்கு 20 இலட்சம் செலவில் மைதான புனரமைப்பு செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது. 2013 ஆண்டில் பழைய மாணவர்கள் பெற்றோர்களின் நிதி சேகரிப்பில் நடந்த வேலைகள் கூட இதன்போது இடம்பெறாமை கவலைக்குறியதே.

மெதகேகில விளையாட்டு மைதானத்தை புனரமைக்க 15 இலட்சம் ஒதுக்கப்பட்டு வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள் மூலமாக தெல்தோட்டை இளைஞர்கள் சுமார் 15 பேருக்கு தொழில் வாய்ப்பு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் அஷ்ரப் மூலமாகவும் ஓரிரு படித்தவர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைத்தன. ஆனால், அமைச்சர் ஹக்கீம் மூலமாக கிடைக்கப்பெற்ற வேலைகள் சமூகம் எனும் அடிப்படையில் கிடைத்ததல்ல, கட்சிக்கான வேலை செய்தவர்களுக்கும் 2011 ஆம் ஆண்டு உள்ளூராட்சி தேர்தலில் களமிறங்கியவர்களுக்கும், 2013 ஆம் ஆண்டு மாகாண சபை தேர்தலில் களமிறங்கிய வேட்பாளர்களுக்கு நெருக்கமானவர்கள் அல்லது அவர்களின் தேர்தல் வேலைளில் ஈடுபட்டோருக்கே வேலைவாய்ப்பு கிடைக்கப்பெற்றுள்ளன என்பது மறுப்ப முடியாத உண்மை.

இது தவிர அனுரடெனியல் மாவட்ட வைத்திய சாலைக்கு 3 மாடி கட்டடம் தருவதாகவும், தெல்தோட்டை முஸ்லிம் மத்தியக் கல்லூரியில் பல் சிகிச்சை நிலையம் அமைப்பதற்கும் வாக்குறுதியளித்திருக்கின்றனர். அதற்கான ஆரம்ப வேலைகள் நடைபெறுகின்றனவா என அவதானித்துக்கொண்டிருக்கிறோம். அத்துடன், தெல்தோட்டை முஸ்லிம் மத்தியக் கல்லூரி அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை திட்டத்திற்குள் அமைச்சர் ஹலீமின் சிபாரிசில் உள்வாங்கப்பட்டிருந்தது. எனினும் சில சதிகள் இடம்பெற்றபோது, அமைச்சர் ஹக்கீமை சந்தித்து உதவி கேட்டபோது, எமக்கு ஆதரவாக செயற்பட்டதையும் மறக்கவில்லை.

எனினும், அமைச்சர் ஹக்கீமுக்கு தெல்தோட்டை பகுதி முஸ்லிம்களில் 90 வீதத்திற்கும் அதிகமானோர் 2000, 2001, 2010, 2015 ஆகிய தேர்தல்களில் வாக்களித்திருக்கின்றனர். இவ்வாறானதொரு நிலையில், அவரின் வெற்றிக்கு, எமது பிரதேச முஸ்லிம்களின் வாக்குகளும் பக்கபலமாக இருந்துள்ளது. இதற்கு பரதிபலனை எதிர்ப்பார்த்து விமர்சனங்களை வெளியிடுவதில் என்ன தவறு இருக்கிறது?

எஸ்.என்.எம்.ஸுஹைல்
ஊடகவியலாளன்

1 comment:

  1. உங்கள் விமர்சனம் ஒருபக்கம் இருக்க... தெல்தோட்டை பிரதேசத்தில் எந்த அரசியல் வாதியால் கூடுதலான சேவைகள் இடம்பெற்றிருக்கின்றன??? எத்தனை அரசியல் வாதிகள் அரசியல் மேடைகளில் எத்தனை வாக்குறுதிகளை அளித்து அதை நிறைவேற்றியிருக்கிறார்கள்??? மயில் தலைவர் எமது பிரதேசத்திற்கு என்ன சேவைகளை செய்துள்ளார்??? ஜே.வி.பி. மூலமாக எத்தகைய அபிவிருத்திகள் இடம்பெற்றிருக்கின்றன??? இவ்வாறு இருக்க,

    ''இம்முறையும் ஏமாந்து போகாமல், பெப்ரவரி 10 ஆம் திகதி யானை வேடமிட்டு வந்திருக்கும் மு.கா.வுக்கு நல்லதொரு பாடத்தை முஸ்லிம் கொலனி, தெல்தோட்டை நகர், பத்தாம்பள்ளி, கோணங்கொட, கிறுவனாகெட்டிய, பியசேனபுரவிலுள்ள (நீங்கள் குறிப்பிடாத ரலிமங்கொட) புத்திசாலியான மக்கள் வழங்குவார்கள் என்ற நம்பிக்கையிருக்கிறது, தண்ணீர் காட்டும் அரசியலுக்கு தக்க பாடம் புகட்ட காத்திருக்கின்றனர் தெல்தோட்டை மக்கள்''

    இவ்வாறு ......... யை தவிர மற்றைய கட்சிகளை விமர்சிப்பாது பக்கச்சார்பாக செயல்படுவதாகும். இது விமர்சனம் அல்ல. நீங்கள் யானையில் கேட்கும் மு.கா. உறுப்பினருக்கு வாக்களிக்க வேண்டாம் என்று கூறுகிறீர்கள். இதன் அர்த்தமென்ன??? யாருக்கு வாக்களிப்பது??? மயிலா??? மொட்டா??? வெற்றிலையா? மனிக்கா???

    ReplyDelete

Powered by Blogger.