January 14, 2018

மங்களவை பல்டியடிக்க, செய்ய முயற்சி


நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவை தமது கட்சிக்குள் கொண்டுவருவதற்கான வியூகமொன்றை வகுத்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் ஒருவர், அது தொடர்பில் இரகசிய பேச்சுகளை ஆரம்பித்துள்ளார் என உயர்மட்ட அரசியல் வட்டாரங்கள் சுடர்ஒளியிடம் நேற்றிரவு தெரிவித்தன.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினரான மங்கள சமரவீர, ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து தற்போது நிதி மற்றும் ஊடக அமைச்சராக பதவி வகித்து வருகிறார். பிணைமுறி விவகாரம் மற்றும் சில அரசியல் விவகாரங்கள் குறித்து அவர் அதிருப்தியில் இருக்கிறார் என கூறப்படுகின்றது.

இந்நிலையில் அவரை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் கொண்டுவர முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. சுதந்திரக்கட்சியின் உயர்மட்ட தலைவர் ஒருவர் இதற்கான வியூகங்களை வகுத்துள்ளதாகவும் அதன்படி சில மந்திராலோசனைகள் இடம்பெற்றுள்ளதாகவும் அறிய முடிந்தது. அவரை மீண்டும் கட்சிக்குள் கொண்டுவந்தால் கட்சியின் உயர்மட்ட பதவி ஒன்றை அவருக்கு வழங்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்தது

0 கருத்துரைகள்:

Post a Comment