Header Ads



கோதபாயவின் திட்டங்களை, இலங்கையர்கள் மறக்கக்கூடாது - மைத்திரியின் நாடகம் மிகச்சிறப்பானது

(ஆர்.யசி)

ஜனாதிபதியின் நாடகம் இன்று மிகச்சிறப்பாக அரங்கேற்றப்பட்டு வருகின்றது. ஊழல் வாதிகளை தண்டிப்பதாக மேடையில் சவால் விடுத்தாலும் அமைச்சரவையில் ஊழல் வாதிகளுடன் கைகோர்த்தே ஜனாதிபதி செயற்பட்டு வருகின்றார் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்தார்.  கோதபாய ராஜபக் ஷவின் வேலைத்திட்டங்களை இலங்கை மக்கள் எவரும் மறந்துவிடக்கூடாது எனவும் அவர் குறிப்பிட்டார். 

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேர்தல் பிரச்சாரக்கூட்டதின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். 

மேலும் கடந்த காலங்களில் கொழும்பு மிகவும் அழகான பராமரிக்கப்பட்டது. எமது ஆட்சியில் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷவின் செயற்திட்டங்ககளின் கீழ் மிகச்சிறந்த வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது. கோத்தாபய ராஜபக் ஷவின் வேலைத்திட்டங்கள் எதையும் இலங்கை மக்கள்  எவரும் மறந்துவிடக்கூடாது. 

எனினும் இன்று கொழும்பின் நிலைமை மிகவும் மோசமானதாக உள்ளது. அபிவிருத்திகள் அனைத்துமே தடைப்பட்டுள்ளது. சரியான வழிநடத்தல் ஒன்று இல்லாமையே இதற்குக் காரணமாகும். ஆகவே இப்போது மக்கள் எடுக்கும் தீர்மானமே அடுத்த கட்டமாக நாட்டை சரியான  பாதையில் கொண்டுசெல்ல ஆரம்பமாக அமையும். மக்கள் விட்ட தவறை சரிசெய்யும் இன்னொரு வாய்ப்பு இப்போது ஏற்பட்டுள்ளது. அதில் மக்களின் தீர்மானமே நாம் எமது போராட்டத்தை அரசாங்கத்திட்கு எதிராக மாற்றியமைக்கவும் அடிப்படையாக அமையும் எனவும்  அவர் குறிப்பிட்டார். 

No comments

Powered by Blogger.