Header Ads



இலங்கை அரசியல்வாதிகளுக்கும், தொண்டர்களுக்குமான அறிவித்தல்


தம்பி! நான் பேராசிரியர் காதர் மொஹிதீன் பேசுகிறேன்........
கடைநிலை தொண்டனுக்கு மதிப்பளித்த சமுதாய தலைவர்

திருப்பூரை சார்ந்த 20 வயது உடைய இளைஞன் ஊடகத்தில் நம் பங்கு என்ற தலைப்பில் சில கருத்துக்களையும் , ஆலோசனைகளையும் தபால் வாயிலாக சமுதாய தலைவர் முனிருல் மில்லத் பேராசிரியர் காதர் மொஹிதீன் அவர்களுக்கு அனுப்பினார். 

அந்த தபால் கிடைத்த உடன் பேராசிரியர் அவர்கள் படித்து விட்டு அந்த இளைஞனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ( தலைவருடைய தொலைபேசி எண் அந்த இளைஞனிடம் இல்லை ) தம்பி ! நான் பேராசிரியர் காதர் மொஹிதீன் பேசுகிறேன் என்று சொன்னதும் அந்த இளைஞன் இன்ப அதிர்ச்சியில் சொல்லுங்க சார் என்று சொல்ல, 

தலைவர் அவர்கள், உங்களுடைய கடிதம் கிடைத்தது தம்பி, உங்களுடைய கருத்துக்கள் சமுதாயத்திற்கு பயனுள்ள கருத்துக்கள் நீங்கள் இரண்டு கருத்தை எழுதி உள்ளீர்கள் ஒன்று ஊடகம் சம்பந்மான கருத்து, மற்றொன்று பேச்சாளர்களை உருவாக்குவது சம்பந்தமான கருத்து ஊடகம் சம்பந்தமான கருத்திற்கு .........................(சில விளக்கங்களை தந்து) நாம் நிச்சயம் பரிசீலிப்போம் மற்றொன்று பேச்சாளர்களை உருவாக்குவது சம்பந்தமாக எதிர்வரக்கூடிய ஜனவரி 20 மயிலாடுதுறையில் நடைப்பெறும் வாழ்வுரிமை மாநாட்டில் பிரகடனப்படுத்துகிறேன் என்று சொல்ல அந்த இளைஞன் சார் என் கருத்திற்கு மதிப்பளித்து பல்வேறு வேலைகளுக்கு மத்தியில் தொலைபேசியில் தொடர்பு கொண்டமைக்கு நன்றி என்று சொல்ல 

அதற்கு தலைவர் அவர்கள் தம்பி ! 

உங்கள் கருத்தை நான் ஏற்று கொள்கிறேனோ இல்லையோ அது வேறு விசயம் ஆனால் இந்த இளம் வயதில் சமுதாயத்தின் மீது அக்கறை கொண்டு எழுதியமைக்கு நான் தான் நன்றி சொல்ல வேண்டும் உங்களை வாழ்த்தி , பாராட்டுவது எனது கடமை என கூறி தொடர்பை துண்டித்தார். 

சமுதாய தலைவர் பேராசிரியர் காதர் மொஹிதீன் அவர்கள்.

தொண்டனுக்கு மதிப்பளிக்கும் தலைவரின் தலைமையில், சமுதாய பணி ஆற்றுவதை எண்ணி பெருமையடைகிறேன்.

-Mackie Faisal-

1 comment:

Powered by Blogger.