Header Ads



அவசியம் செய்துகொள்ள வேண்டிய பரிசோதனைகள்


‘‘சரியான உணவுப்பழக்கம், உடற்பயிற்சிகளின் மூலம் ஆரோக்கியமான வாழ்க்கையை மேற்கொள்வதைப் போலவே,நோய்கள் வந்துவிட்டால் அவற்றை கண்டறிந்து உரிய நேரத்தில் சிகிச்சை மேற்கொள்வதும் அவசியம்’’ என்கிற பொது மருத்துவர் அனிதா, அவசியம் செய்துகொள்ள வேண்டிய சில பரிசோதனைகள் பற்றி இங்கே விளக்குகிறார்...

ஆண் பெண் இருபாலரும்

வயது    பரிசோதனை    கால இடைவெளி

40 (உடலில் எந்தவிதமான பிரச்னையும், பரம்பரை மருத்துவ வரலாற்றில் எந்த நோயும் இல்லாதவர்கள்)    முழு உடல் பரிசோதனை (Master Check-Up)    1-2 வருட இடைவெளிகளில்
சர்க்கரை, ரத்த அழுத்தம் பிரச்னைகள் இருந்தால்     ரத்த சர்க்கரை, சிறுநீரில் சர்க்கரை அளவு, ரத்த அழுத்த அளவு    கட்டுக்குள் இருப்பதைப்
பொறுத்து மருத்துவர் பரிந்துரைக்கும் கால 
இடைவெளிகளில்
50 வயதுக்கு மேல்     நீண்ட நாள் சர்க்கரை, ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் இருப்பவர்கள் இதயத்தில் அடைப்பு இருப்பதை அறிய ட்ரெட்மில், Eco பரிசோதனை கள்  செய்ய வேண்டும்.    1-2 வருட இடைவெளிகளில்
60 வயதுக்கு மேல்    முழு உடல் பரிசோதனை    அறிகுறிகள் தெரியாது என்பதால் முதியோர் நல மருத்துவரை அணுகி வருடம் ஒருமுறை செய்து கொள்ள வேண்டும்


ஆண்களுக்கு...

வயது    பரிசோதனை    கால இடைவெளி

60க்கு மேல்    இனப்பெருக்க உறுப்பு புற்றுநோய் பரிசோதனை (Prostate cancer test)    வருடம் ஒரு முறை

பெண்களுக்கு...

வயது    பரிசோதனை    கால இடைவெளி

30க்கு மேல்    தைராய்டு    தைராய்டு இல்லை என்று தெரிந்தால் 2 முதல் 5 வருடங்களுக்கு ஒரு முறை

தைராய்டு இருப்பவர்கள் PH level தெரிந்து கொள்ள அடிக்கடி செய்ய வேண்டும்.

40    மேமோகிராம்-
மார்பக புற்றுநோய்க்கான பரிசோதனை
    பரம்பரையில் யாருக்கும்
மார்பகப் புற்றுநோய் இல்லாதவர்கள் 1 முறை செய்து கொண்டால் போதுமானது. யாருக்கேனும் மார்பக புற்றுநோய் இருப்பவர்கள் 
2- 5 வருடங்களுக்கு 1 முறை செய்வது அவசியம்

45    கர்ப்பப்பைவாய் புற்றுநோய் பரிசோதனை (Pap Smear and Pelvic exam)    2-5 வருடங்கள் இடைவெளியில்
55    எலும்பு அடர்த்தி பரிசோதனை (Bone Density test)    பரம்பரையில் எலும்புத் தேய்மான நோய் இருப்பவர்கள் மெனோபாஸுக்குப் பிறகு ஒவ்வொரு வருடமும் செய்ய வேண்டும்.

No comments

Powered by Blogger.