Header Ads



மிஸ்டர் கிளின், கிளின் போல்ட்டானார்..!

இதுவரை காலமும் மிஸ்டர் கிளின் என போற்றப்பட்டு வந்த நாட்டின் பிரதமர் ரணில் பிணைமுறி விவகாரத்தினால் கிளின் போல்ட் ஆகிவிட்டதாக மக்கள் விடுதலை முன்னணியின் மத்திய குழு உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் தெளிவூட்டும் நிகழ்வு நோர்வூட் பிரதேசத்தில் இன்றைய 04- தினம் இடம்பெற்றது. இதில், கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

நமது நாட்டில் இடம்பெற்றுள்ள பிணைமுறி மோசடி தொடர்பில் ஜனாதிபதியின் ஆணைக்குழு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.

இந்த அறிக்கையின் படி பொது மக்களின் சொத்துக்கள் பதினொராயிரத்து 145 மில்லியன் ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது.

65 ஆண்டு காலமாக நமது நாட்டு அரசியலில் ஐக்கிய தேசிய கட்சியினர் உட்பட ராஜபக்சாக்களும் பொது சொத்துக்களை சூறையாடி வந்துள்ளனர்.

மக்கள் விடுதலை முன்னணி இந்த பிணைமுறி விவகாரத்தில் கமிட்டி ஒன்றினை அமைத்து கோப் அறிக்கையை சமர்ப்பித்ததன் ஊடாகவே இந்த பிணை முறி விவகாரம் கண்டறியப்பட்டது.

இந்த விவகாரத்தில் முழு ஐக்கிய தேசியக் கட்சியினரும், மோசடியில் ஈடுபட்டுள்ளனர். அத்தோடு பிணைமுறி விடயத்தில் சம்மந்தப்பட்டுள்ளனர்.

பிணை முறி விவகாரம் தொடர்பாக நாட்டின் ஜனாதிபதியால் உருவாக்கப்பட்ட ஆணைக்குழு அதன் அறிக்கைகளை தெளிவாக சமர்ப்பிக்கப்பட்ட பின் அதை ஜனாதிபதி தெளிவாக பகிரங்கப்படுத்தியுள்ளார்.

இதன்படி, முழு ஐக்கிய தேசியக் கட்சியினரும் மோசடியில் ஈடுப்பட்டுள்ளனர் என்பது தெளிவாகின்றது என்றும் மக்கள் விடுதலை முன்னணியின் மத்திய குழு உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.