Header Ads



பெண் அதிபர் மண்டியிட்ட விவகாரம், ஊவா மாகாண சபையில் அமளிதுமளி

-எம்.செல்வராஜா-

பதுளை தமிழ் மகளிர் மகா வித்தியாலய அதிபர் முழங்காலிட்டு, ஊவா மாகாண முதலமைச்சரிடம் மன்னிப்புக் கோரியமை தொடர்பான விவகாரத்தால், ஊவா மாகாண சபையின் நேற்றைய அமர்வில் பெரும்  அமளி துமளி ஏற்பட்டது.  

ஊவா மாகாண சபையின் 2018ஆம் ஆண்டுக்கான கன்னியமர்வு, சபைத்தலைவர் ஏ.எம். புத்ததாச தலைமையில் சபை மண்டபத்தில், நேற்று (11) நடைபெற்றது.   

சபை அமர்வு ஆரம்பமான போது, சபையின் உறுப்பினர் எம்.சச்சிதானந்தன் மேற்படி விவகாரம் தொடர்பாக, முதலமைச்சரிடம் வினவினார். அதையடுத்து, ஊவா மாகாண சபையின் ஜே.வி.பி. உறுப்பினர் சமந்த வித்தியாரட்னவும் சபை உறுப்பினர் எம். சச்சிதானந்தனுடன், அதிபர் மன்னிப்புக் கோரிய விவகாரம் தொடர்பில் கேள்வி எழுப்பினர்.  

இதற்கு முதலமைச்சர் நடந்த சம்பவம் குறித்து தெளிவுப்படுத்தினார். முதலமைச்சரின் அக்கருத்தை ஏற்றுக்கொள்ளாமல், எதிர்க்கேள்விகள் கேட்கப்பட்ட போது, இரு தரப்பினருக்குமிடையே காரசாரமான விவாதங்களும், கடுமையான வார்த்தைப் பிரயோகங்களும் இடம்பெற்றன. இதனால் சபையில் அமைதியின்மை ஏற்பட்டது.   

சபையை அமைதிக்கு கொண்டு வர, சபைத்தலைவரால் எடுக்கப்பட்ட முயற்சிகள் பயனளிக்கவில்லை.   இதையடுத்து, சபையமர்வு, திகதி குறிப்பிடப்படாமையிலேயே ஒத்திவைக்கப்பட்டது.    

No comments

Powered by Blogger.