Header Ads



முஸ்லிம் பகுதிகளுக்கு நாளை, ஜனாதிபதி விஜயம்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முஸ்லிம் பிரிவின் பிரதித் தலைவரும், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் அழைப்பின் பேரில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும், ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன நாளை புதன்கிழமை காத்தான்குடி நகருக்கு விஜயம் செய்யவுள்ளார். 

இதன்போது, காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மைதானத்தில் மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாபெரும் பொதுக் கூட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொள்ளவுள்ளமைக் குறிப்பிடத்தக்கது. 

(பி.எம்.எம்.ஏ.காதர்) 

ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேன நாளை(31-01-2018)அம்பாறை மாவட்டத்திற்கு விஜயம் செய்கின்றார்.ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் கல்முனை தொகுதி இணைஅமைப்பாளரும் கல்முனை மாநகர சபையில் போட்டியிடும்  2ஆம் வட்டார வேட்பாளர் இஸட்.ஏ.எச்.றஹ்மானின் வேண்டுகோளின் பேரில் அவர்  மாலை 4.00 மணிக்கு பெரியநீலாவணை வீசி வீதியில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அலுவலகத்திற்கு வருகை தந்து விஷேட உரையாற்றவுள்ளதாக இணைஅமைப்பாளர் இஸட்.ஏ.எச்.றஹ்மான் தெரிவித்தார். இந்த வருகையின் போது  அவர் அம்பாறை,அக்கரைப்பற்று,சம்மாந்துறை ஆகிய இடங்களில் நடைபெறவுள்ள பொதுக் கூட்டங்களில் உரையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

2 comments:

  1. மைத்திரி வந்தால் அவர்கிட்ட - அவர் இப்ப கடிவாளம் போட்டு வைச்சிருக்கிற ஞானசார எங்கே என்று கேளுங்க .............

    திரும்ப எப்ப அவன்ட கடிவாளத்தை அவுத்துவிடுவீங்க -
    என்பதையும் கொஞ்சம் கேட்டு சொல்லச் சொல்லுங்க ஹிஸ்புல்லாட்ட.........

    ReplyDelete
  2. plus..ask him when he will ban the cow meat...?

    ReplyDelete

Powered by Blogger.