Header Ads



ஐ.தே.க.யின் அமைச்சுக்களை, கைப்பற்றும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு

தூரநோக்கற்ற பொருளாதாரத் கொள்கைகளாளும், பொருளாதார முகாமைத்துவம் ஸ்தீரமற்ற நிலையில் உள்ளமையாலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாட்டின் எதிர்கால பொருளாதாரக் கொள்கைகளை கையில் எடுக்க தீர்மானித்துள்ளார். அமைச்சரவையின் பிரதானியாக அவர் காணப்படுவதால் அரசமைப்பின் 41,43ஆம் சரத்துகளின் பிரகாரம் அமைச்சுக்களை தீர்மானிப்பதில் எவருடைய ஆலோசனையுமின்றி செயற்பட அதிகாரமுள்ளதென விஞ்ஞான தொழில்நுட்பம் மற்றும் ஆய்வுகள் அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த

கொழும்பு டார்லி வீதியில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் “தூய்மையான ஆட்சியை உருவாக்கும் நோக்கில் நாட்டின் அதிகாரத்தையும், கிராமத்தின் அதிகாரத்தையும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு வழங்க வேண்டுமென்ற தொனிப்பொருளில் சு.கவின் உள்ளூராட்சி கொள்கை வகுப்பு வெளியிடப்பட்டள்ளது. ஊழல் அற்ற ஆட்சியை உருவாக்க ஜனாதிபதியுடன் மக்கள் கைக்கோக்க வேண்டும்.

ஒவ்வொரு வருடமும் பொருளாதாரக் கொள்கைகளை வகுத்துக்கொண்டிருக்க முடியாது. அரசு என்றால் 4 அல்லது 5 வருடங்களை இலக்காகக்கொண்ட பொருளாதாரக் கொள்கைகள் வகுக்கப்பட வேண்டும். எனவே, ஒட்டுமொத்த பொருளாதாரத்தின் ஸ்திரத்தன்மையை அடிப்படையாகக் கொண்டே கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் தேசிய பொருளாதார சபையை அமைத்திருந்தார்.

ஜனாதிபதி அமைச்சுப் பதவியை தம்வசப்படுத்தும் நோக்கில் ஐ.தே.கவை விமர்சித்திருக்கவில்லை. நாட்டின் பொருளாதாரத்தை மேலும் ஸ்திரப்படுத்தும் நோக்கில் தேர்தலின் பின்னர் தேசிய பொருளாதார சபையின் செற்பாடுகளை தமது தலைமைத்துவத்தின் கீழ் விரிவுப்படுத்துவதையே கூறியிருந்தார். என்றாலும், அமைச்சரவையின் பிரதானியாக ஜனாதிபதியே உள்ளார். அமைச்சரவையை வழிநடத்துவது பிரதமராக இருந்த போதிலும் அமைச்சரவையின் பிரதானியாகவுள்ள ஜனாதிபதி பிரதமரின் ஆலோசனையின் அமைச்சுகளை மாற்றவும் அமைச்சுகளை தம்வசப்படுத்தவும் அதிகாரமுடையவர். அரசமைப்பின் 41 மற்றும் 43 சரத்துகளில் இதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு“ என்றார்

No comments

Powered by Blogger.