Header Ads



முஸ்லிம் திருமணச்சட்ட திருத்தம், நீதியமைச்சரிடம் கையளிப்பு


முஸ்லிம் திருமணச் சட்டத்தில் திருத்தங்களை செய்ய பரிந்துரைகளை முன்வைக்க நியமிக்கப்பட்ட குழு, தனது அறிக்கையை நீதியமைச்சர் தலதா அத்துகோரளவிடம் கையளித்துள்ளது.

குழுவின் தலைவரான உயர் நீதிமன்ற நீதியரசர் சலீம் மர்சுக் அறிக்கையை அமைச்சரிடம் கையளித்ததாக நீதிமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த 2009ஆம் ஆண்டு முன்னாள் நிதியமைச்சரால் 17 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டது.

குழுவின் அறிக்கையை துரிதமாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு நீதியமைச்சர் தலதா அத்துகோரள அண்மையில் குழுவின் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியிருந்தார்.

இதற்கு அமைய அறிக்கை இன்று நீதியமைச்சரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. குழு முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து சட்டத்தில் அடங்கியுள்ள பல விடயங்கள் தொடர்பாக ஆராய்ந்துள்ளதுடன் திருமண வயது சம்பந்தமாக கூடுதல் கவனத்தை செலுத்தியிருந்தது. DC

No comments

Powered by Blogger.