January 02, 2018

சாய்ந்தமருதில் சர்வஜன வாக்கெடுப்பு


-எம்.வை.அமீர்-

வங்குரோத்து அரசியல்வாதிகள் சிலர் கூறுவதுபோல் சாய்ந்தமருதில் தற்போது இடம்பெறுவது அரசியல் நடவடிக்கை இல்லை என்றும் மாறாக அந்த மக்களின் மூன்று தசாப்தகால கோரிக்கையான தனியான உள்ளுராட்சிசபை தங்களுக்கு வேண்டும் என தேசியத்துக்கு எடுத்துக்கூறும் சர்வஜன வாக்கெடுப்பு மட்டுமே  என்று சாய்ந்தமருது உள்ளுராட்சி மன்ற இலக்கை நோக்கிய மக்கள் பணிமனை களமிறக்கியுள்ள, சுயட்சைக்குழுவில் 21 ஆம் வட்டாரத்தில் போட்டியிடும் தொழிலதிபர் ஏ.ஆர்.எம். அஸீம் தெரிவித்தார்.

குறித்த 21 ஆம் வட்டாரத்தில் சுயட்சைக் குழுவுக்கான தேர்தல் அலுவலகம் ஒன்று 2018-01-01 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது. நிகழ்வுக்கு பிரதம அதிதியாக சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின் தலைவர் வை.எம்.ஹனிபா கலந்து கொண்டதுடன் பள்ளிவாசலின் உயர்மட்ட உறுப்பினர்களும் ஊர்ப் பிரமுகர்களும் பெரும் திரளான மக்களும் கலந்து கொண்டிருந்தனர்.

பிரதேச செயலகத்தின் முன்னாள் சிரேஷ்ட நிருவாக உத்தியோகத்தரும் சாய்ந்தமருது பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் தலைவருமான எம்.எம்.உதுமாலெப்பை தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய அஸீம், 

சாய்ந்தமருதில் உள்ள 6 வட்டாரங்களையும் வென்று அத்துடன் மேலதிக ஆசனங்களையும் பெற்றுக்கொண்டு வேறு கட்சியுடன் கூட்டாட்சி செய்வதற்கு பள்ளிவாசல் இரகசிய ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறப்படும் கூற்றில் உண்மை எதுவுமில்லை என்றும் நிட்சயமாக தாங்கள் யாருக்கும் முட்டுக்கொடுக்க போகமாட்டோம் என்றும் முதல்வர் பதவிக்கோ அல்லது பிரதி முதல்வர் பதவிக்கோ சாய்ந்தமருது மக்களின் அபிலாஷைகளை அடகு வைக்க மாட்டோம் என்றும் தெரிவித்தார்.

சில அரசியல்வாதிகள் இருபதுகோடி முதல் முப்பதுகோடி வரை தங்களிடம் பேரம்பேசுவதாகவும் அதற்கு இந்த சுயட்சைக்குழு சோரம் போகாது என்றும் தெரிவித்தார்.  தன்னை தோக்கடிப்பதற்கு ஒருவர் ஒருகோடி செலவிடவுள்ளதாக தனக்குத் தகவல் கிடைத்துள்ளதாக தெரிவித்த அஸீம், சாய்ந்தமருதில் திட்டமிட்டு பிரச்சனைகளை உண்டாக்கி தேர்தலில் குழப்பங்களை ஏற்படுத்த திட்டமிடுவதாகவும் தெரிவித்தார். ஜனநாயக முறையில் தேர்தலை தாங்கள் எதிர்கொள்வோம் என்றும்  தெரிவித்தார்.

சாய்ந்தமருது மக்களின் அபிலாஷைகளுக்கு எதிரான அணியில் இருப்போர் குடிகாரர்கள் என்று தெரிவித்த அஸீம் மானமுள்ள எந்த சாய்ந்தமருதானும் அவர்களது பிச்சைக் காசுக்கு சோரம் போகமாட்டான் என்றும் தெரிவித்தார்.

சிலர் பிரதேசங்களில் குழப்பங்களை ஏற்படுத்த முனைவதாக தெரிவித்த அஸீம் சண்டை என்றால் தாங்களுக்கு சக்கரைப்பொங்கல் என்றும் இருந்தாலும் உள்ளுராட்சிசபை என்ற தாங்களின் இலக்கை அடைவதற்காய் பொறுமை காப்போம் என்றும் தெரிவித்தார்.

நிகழ்வில் குறித்த வட்டரத்துக்கான தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுக்க குழு ஒன்றும் இங்கு தெரிவு செய்யப்பட்டது.

3 கருத்துரைகள்:

சாய்ந்தமருது நம்பிக்கையாளர் சபையும் அவர்களுக்கு பின்னால் இருக்கும் கூட்டமும் மாபெரும் ஜனநாயக விரோதிகள். ஒரு நம்பிக்கையாளர் சபைக்கு இருக்க வேண்டிய விழுமியங்கள், கடப்பாடு, கெளரவம் அனைத்தையும் மீறி மக்களை மிகவும் காட்டு மிராண்டித்தனமாக வழிநடத்தி செல்லும் ஒரு சபையாகும். இதட்கான அனைத்து பொறுப்பும் நம்பிக்கையாளர் சபை தலைவர் ஹனிபா மாஸ்டரே பொறுப்பேற்க வேண்டும். இந்த பிரச்சினை நிட்சயமாக கலந்துரையாடல் மூலம் அனைத்து தரப்பிலும் ஏற்றுக்கொள்ள கூடிய ஒரு தீர்வே எல்லோருக்கும் ஆரோக்கியமாக இருக்கும். அதை விடுத்து முஸ்லிம்கள் என்ற வகையில் சிந்திக்காமல் பிரதேச ( எல்லைக்கோடுகளால் மகிழ்ச்சி அடையும் ஒரு கூட்டம்) வாதத்தை முன்னெடுத்து செல்லும் இந்த குழுவின் செயட்பாடு ஒரு பிழையான முன்னுதாரணமாகும்.
சர்வஜன வாக்கெடுப்பு...சாய்ந்தமருது பிரகடனம்...உரிமை போராட்டம்...போன்ற வார்த்தைகளை கூறி இந்த வார்த்தைகளை தயவு செய்து கொச்சை படுத்தாதீர்கள்.

inthak koottam eppavume mattruth thisayil oadufavarkal.

Mr. குறுவி. சாய்ந்◌தமருது மக்கள் காட்டுமிரூன்டிகள் இல்லை. தற்துபோதுதான் நாங்கள் நாங்கள் விழித்து இருக்கின்றோம். ஒற்றுமைபட்டிருக்கின்றோம். எங்களை எங்கள் பள்ளித் தலமைகள் நல்ல மறையில் வழி நடத்தகின்றது.வெளியில் இருந்து அறிக்கை விடுவதில் எந்த பிரயோசனமும் இல்லை. நீங்கள் உங்களுடைய சுயநலத்திற்காக கேசுகின்றீ◌ாகள் எங்கள் பள்ளித்த தலமைகள் ஊரின் விடிவவிறகாக கேசுகின்றது.

Post a Comment