Header Ads



அதிக வயதானவர்களை உள்ளடக்கிய, இலங்கை பாராளுமன்றம்

புதிதாக பிறந்துள்ள இவ்வாண்டில் இலங்கை நாடாளுமன்றில் அதிகமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் 70 வயதிற்கு மேற்பட்டவர்களாக உள்ளனர்.

நாடாளுமன்ற இணையத்தள தகவல்களின்படி, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அமைச்சர் லக்ஷமன் கிரியெல்ல மற்றும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.பியதாஸ ஆகியோர் 70 வயதை அடைய உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சரத்பொன்சேகா உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும் 70 வயதை நெருங்க உள்ளார்கள். 70 வயதினை கடந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்ட நாடாளுமன்றங்களில் இலங்கை நாடாளுமன்றமானது எதிர்வரும் 2020 ஆண்டில் 9ஆவது இடத்தினை பெற்றுக்கொள்ள உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான, சரத் அமுனுகம, வாசுதேவ நானயகார,மகிந்த யாபா அபேவர்தன, சம்மந்தன்,சுவாமிநாதன்,ஜோன் செனவிரத்ன,ஜோன் அமரதுங்க,நிமால் சிறிபாலடி சில்வா போன்ற பலரும் 70 வயதினை கடந்த நாடாளுமன்ற உறுப்பினர்களாக உள்ளனர்.

இதேவேளை அதிகரித்து வரும் சனத்தொகைக்கு மத்தியில் முதியவர்களின் எண்ணிக்கையும் வேகமாக அதிகரித்து வருவதானது சமூக பொருளாதார பிரச்சினையை இலங்கைக்கு ஏற்படுத்தும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

1 comment:

  1. So the Nickname of the Sri Lanka Parliamant is Elder's Home is in it? very nice.

    ReplyDelete

Powered by Blogger.