Header Ads



சுதந்திரக் கட்சியுடன் இணைய தயாரில்லை, மைத்திரியின் பதவிக் காலம் எக்காரணம் கொண்டும் நீட்டிக்கப்படக் கூடாது.


“ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் நான் இல்லை” என்று, முன்னாள் ஜனாதிபதியும் குருணாகலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ச கூறியுள்ளார். அதேவேளை, உள்ளூராட்சித் தேர்தல்களின் பின், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து தெரிவாகக் கூடிய உறுப்பினர்களுடன் இணைந்து பணியாற்றத் தயாராக இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

வெகுசன ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியொன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

“ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் தேர்தலை முன்னிட்டு கூட்டணி வைத்துக்கொள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயாராக இல்லை. தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு கணிசமான இடங்களில் வெற்றிபெறும். 

“ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவர் என்பதற்காக, மற்றொரு கட்சிக்கு ஆதரவு வழங்குவது எந்தவிதத்திலும் ஒழுக்க விதிமுறை மீறலாகக் கருதப்பட முடியாது. ஜனவரி எட்டாம் திகதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வீழ்த்தப்பட்டதே உண்மையான ஒழுக்க விதிமுறை மீறல்.

“சட்ட மா அதிபரின் நிலைப்பாட்டுக்கிணங்க மீயுயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கினாலோ, பத்தொன்பதாவது திருத்தச் சட்டம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்குப் பொருந்தாது என்று அறிவிக்கப்பட்டாலோ, அது எனக்கும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கவுக்கும் கூடப் பொருந்தாததாகவே கொள்ளப்படவேண்டும்.

“இதன்படி பார்த்தால், இரண்டு முறை பதவி வகித்த நான் மற்றொரு முறை ஜனாதிபதி தேர்தலில் பங்கேற்கவும் எந்தத் தடையும் இல்லை. எனினும் நாட்டின் தற்போதைய சூழ்நிலையில், ஜனாதிபதியின் பதவிக் காலம் எக்காரணம் கொண்டும் நீட்டிக்கப்படக் கூடாது.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

2 comments:

  1. நீடிக்கவும் கூடா, நீர் வரவும் கூடாது

    ReplyDelete

Powered by Blogger.