Header Ads



தேசியப்பட்டியல் நாடகம், நடிக்கிறார் ஹக்கீம் - அதாஉல்லா

(ஏ.டபள்.யு.எம்.ஜெசீல்,பி.எம்.எம்.ஏ.காதர்)

உள்ளுராட்சி சபைகளை வெற்றியடைச் செய்வதற்காக பாராளுமன்ற உறுப்பினர் சல்மானை இராஜினாமா செய்யவைத்து தற்போது தேசியப்பட்டியல் நாடகம் நடித்துக் கொண்டிருக்கிறார் முஸ்லிம் காங்ரஸ்தலைவர் ரஊப் ஹக்கீம் என முன்னாள் அமைச்சரும் தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா தெரிவித்தார்.

தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் கல்முனை மாநகர சபையில் போட்டியிடும்  மருதமுனை வேட்பாளர்களான ஏ.எல்.றிபாஸ்,ஐநூறுள் பவுஸ்,ஏ.எஸ்.றிஸான், ஏ.எஸ்.ஹமீது ஆகியோரை ஆதரித்து மருதமுனை கடற்கரையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். வேட்பாளர் சட்டத்தரணி ஏ.எல்.றிபாஸ் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் முன்னாள் ஏ.எல்.எம்.அதாஉல்லா மேலும் உரையாற்றுகையில் தெரிவித்தாவது , 

கல்முனை மாநகரசபையில் முன்னொருபோதும் இல்லாத எதிர்ப்பலையை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சந்தித்துள்ள நிலையில் கலைக்கப்பட்ட கல்முனை மாநகரசபையை ஆட்சி செய்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கல்முனையானது தனது கோட்டை என்று சொல்லிக் கொண்டிருந்த காலம் மலையேறிவிட்டது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் போக்கில் குறைபாடுள்ளது என்று நாங்கள் சொல்லும் போது மக்கள் புரிந்து கொள்ள முற்படவில்லை. ஆனால் கட்சியின் தலைமை அதை நிதர்சனமாகத் தெளிவுபடுத்தி இருக்கின்றது. இதே நிலைமைதான் அட்டாளைச்சேனை,சம்மாந்துறை,இறக்காமம்,பொத்துவில்,நிந்தவூர், ஏறாவூர், வாழைச்சேனை போன்ற ஏனைய இடங்களிலும்.அதனல்தான் சல்மான் அவர்களை உடனே இராஜினாமா செய்யவைத்து தற்போது தேசியப்பட்டியல் நாடகம் நடித்துக் கொண்டிருக்கிறார் முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரஊப் ஹக்கீம்.

எல்லா ஊர்களும் ஒன்று சேர்ந்து எங்களுக்கு வாக்களித்து மீண்டும் எங்கள் உறுப்பினர்களைத் தெரிவு செய்யுங்கள் அதன் பின்னர் எந்த ஊர் எங்களுக்கு அதிகூடிய வாக்கினை அளிக்கின்றதோ அவர்களுக்;கு தேசியப்பட்டியல் தருவேன். அதனால்தான் சல்மானை இராஜினாமா செய்யவைத்து தற்போது தேசியப் பட்டியலை வைத்துக்கொண்டு உங்கள் வாக்கிற்கான விலை எங்கள் கையில் என்று விலைபேசிக் கொண்டிருக்கின்றார்.

எனவேதான் இன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நிலைமை தலைகீழாக மாறி தேசியப் பட்டியல் ஒன்றே மாநகரசபைத் தேர்தலை வெல்வதற்கான யுக்தி என்று அதன் தலைமை மக்களிடம் விலைபேசிக் கொண்டிருன்கின்றது.தேர்தலில் மக்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸூக்கென்று வாக்களித்தார்களே தவிர தலைவர் ரஊப் ஹக்கீமுக்கல்ல. மரத்தின் கோட்டை என்று வர்ணிக்கப்பட்ட கல்முனையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் யானைப்பாகனாக வலம் வருவதென்பது மக்களின் மனதில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியானது அழிகின்ற நிலையில் உள்ளது என்ற எண்ணப்பாட்டை தோற்றிவித்துள்ளது.

மருதமுனையைப் பொறுத்தமட்டில் அந்த மக்கள் படித்த பண்புள்ள மக்கள் இங்கும் தனது சாணக்கியத்தினை பயன்படுத்தி மக்களை தனது மாயவலைக்குள் சிக்க வைக்கலாம் என்று எண்ணி மக்களின் அபிலாஷைகளை, விருப்பங்களை உதறித்தள்ளி தான் தோன்றித்தனமாக முன்னர் இரண்டு முறைகள் மாநகரசபை உறுப்பினர்களாக இருந்த அதே பழைய வேட்பாளர்களை நிறுத்தி இருக்கின்றார். 

இதற்கு சாய்ந்தமருதை தனது கோட்டையாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வைத்துக் கொண்டிருந்தது. அதன் 14000 வாக்குகளை தூக்கி எறிந்து விட்டு அந்த மக்களை புறக்கணித்து அங்கேயும் முஸ்லிம் காங்கிரஸை பூரணமாக அழித்துவிட்ட பிரதி அமைச்சர் தம்பி ஹரீஸ் சேர்ந்து அங்கீகாரம் வழங்கியிருக்கின்றார்.

இதனால் இன்று சின்னதொரு பிள்ளையும் பாரியதொரு சாவாலைப்போல் தெரிகின்றது.அதுமாத்திமன்றி மேடைமேடையாக நாங்கள் செய்தது தப்பு என்று இவர்கள் ஒத்துக்கொண்டு எங்களுக்கு கடைசியாக சந்தர்ப்பம் தாருங்கள் என்று அழுது கொண்டிருக்கிறார்கள் இது மக்களின் அமானிதம் இதை மக்கள் பாதுகாக்கும் நிலை வந்துவிட்டது.

தங்களின் தான்தோன்றித்தனமான செயற்பாடுகளால் சாய்ந்தமருதில் கட்சி அழிந்துவிட்ட சரித்திரம் ஒருபுறமிருக்க அங்கு சாணக்கியத் தலைமை போக முடியாத ஒரு துரதிஷ;டம் தோன்றியிருக்கின்றது. அண்மையில் பாலமுனையில் மேடைக்கு கல்லெறிந்து மக்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிஸின் தலைமையை துரத்தியுள்ளார்கள்.இப்போது அவர் மற்ற ஊர்களுக்குச் சென்று சோர்ட்கட் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறார்.ஏன் இந்த நிலைமை இவர்களுக்கு இவர்களிடம் ஹக் இல்லை.

இந்தப் பிரச்சினைகள் எல்லாவற்றிற்கும் காரணம் இவர்கள்தான். பிரச்சினைகளை தோற்றுவிப்பதற்கு ரணில் பாவிக்கின்ற தலைமைகள் இவர்கள்தான்.ஒருபுறம்  கிண்ணியா மூதூர் போன்ற இடங்களை சர்வதேசம் கபளீகரம் செய்து கொண்டிருக்க மறுபுறம் இவற்றினை பெரும்பாண்மை சமூகங்கள் விலைபேசி விற்றுக் கொண்டிருக்கின்றன.இந்த நிலங்களை மீட்பது யார்? இந்தப் பிரச்சினைகளை தீர்ப்பது யார்? ரஊப் ஹக்கீம் தீர்த்துத் தருவாரா? றிஸாட் பதியுத்தீன் தீர்த்துத் தருவாரா? காத்தான்குடியில் றஹ்மான் தீர்த்துத் தருவாரா? அல்லது ஜெ.வி.பி தீர்துத்தருமா? தீர்த்துத் தருவார்கள் என்றால் நாங்களும் அவர்கள் பின்னால் வருவதற்கும் ஆயத்தமாக இருக்கிறோம் இந்த அதாஉல்லா ஆயத்தமாக இருக்கிறான்.

ஒன்றையும் இவர்களால் தீர்க்கமுடியாது.எல்லா முஸ்லிம்களின் மொத்த வாக்குகளையும் ரணிலிடம் கொடுக்கப்போகிறார்கள்.எல்லா வாகனங்களையும் யானையின் முதுகில் ஏற்றப்போகிறார்கள்.மயில் என்று வருபவர்களுடைய வாக்கும் யானைக்குத்தான் போய்ச் சேரப்போகிறது. என்ன பேச்சைப் பேசுகிறான் அந்தத் தம்பி றிஸாட்.பேசும் போது மெய்கூசவில்லையோ,உடல் நடுக்கல்லையோ, அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்று தெரியவில்லையோ? அந்தத் தம்பி பெரும் தலைவர் அஷ்;ரப் அவர்களுடன் ஒரே மேசையில் அமர்ந்து டீ குடித்தது போன்று தனது பேச்சைப்பேசிக்கொண்டு இருக்கின்றார்.


இந்த முஸ்லிம் சமூகத்தின் விடுதலையைப் பற்றி தான் அஷ;ரபோடு இணைந்து செயற்பட்டதாகக் அவர் கூறுகிறார்.அந்தப் பெரும் தலைவரை அருகில்நின்று பார்த்திருப்பாரா இந்தத் தம்பி? நாங்கள் முஸ்லிம் காங்கிரஸை வளர்க்கும் போது எஸ்.எல்.எப்.பி இன் அமைப்பாளராக இருக்கிறார் அவர்.இன்று நிலைமை மாறுகின்றதாக இவர்கள் எண்ணிக் கொண்டு பணம் இருந்தால் வாக்குகளை வாங்கிவிடலாம் என்று சொல்கிறார்கள்.

நாங்கள் முஸ்லிம் காங்கிரஸை வளர்ப்பதற்கு அஷ்;ரப்பிடம் நாங்கள் காசுவாங்கினோமா? நம் தாய் வாழ்வதற்கும் மக்களின் உரிமையை எடுப்பதற்கும் நாங்கள் பணம் கொடுத்தோமா?நாங்கள் மனிதனா மிருகமா இல்லை மனிதத்துவத்திலிருந்து சென்ற வேறு ஏதாவது சக்திகளா? கொடுங்கள் அவைகள் மக்களின் கனீமத்துப் பொருட்கள். தேர்தல் வந்தால் மக்களுக்கு காசு கொடுக்க முற்படுகிறார்கள் இதனைப் பார்த்தால் புரியவில்லையா இது உண்மையான கட்சியில்லை என்று? இவை உணர்வு ரீதியான இயக்கமில்லை.பணத்திற்கு விலைபோகாத தூய்மையான வேட்பாளர்களை நாங்கள் தெரிந்து எடுக்க வேண்டும் என்பதுதான் எமது நோக்கம்.

எந்த உரிமையில் இந்த றிஸாட் பதியுத்தீன் என்ன அடிப்படையில் இவர் தேர்தல் கேட்கிறார்? ஒன்று அவரது மாவட்டத்திலே ஏதாவது செய்தவராக இருக்க வேண்டும் இல்லை முஸ்லிம் அரசியலை தெரிந்த ஒருவராக இருக்க வேண்டும், இல்லை என்றால் முஸ்லிம்களுக்காக ஏதாவது விடயத்தில் முட்டிமோதி சாதித்தவராக இருக்க வேண்டும்.எல்லாமே நாடகம். இப்போது தங்கள் போஸ்டர்களில் தலைவரின் படத்தைப் போட்டுக்கொண்டு மேடைமேடையாக புழுகித் திரிகிறார் அந்தத் தம்பி.

அங்கு அவர் யானையில் கேட்கிறார் அங்குபோய் ரஊப் ஹக்கீம் யானைக்கு ஓட்டுப்போடாதீங்கோ உங்களுக்குத் தெரியாதா யானையை என்று அவர் மக்களிடம் கூறுகிறார் கல்முனையில் அவர் யானையில் கேட்கிறார். சின்னப்பிள்ளைகூட இவர்களின் நாடகங்களைப் புரிந்து கொள்ளும். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எனும் அந்தப் பெரும் கட்சியை வளர்த்தவர்கள் நாங்கள். ரஊப் ஹக்கீம் மக்கள் அவர்களது வீட்டில் ஒருகோழிக்குஞ்சு செத்திருக்குமா? அதனால்தான் மக்கள் இன்று இவர்களின் சுயரூபங்களை மக்கள் அறிந்துகொண்டு விழித்துவிட்டார்கள். எங்களைப் பொறுத்தவரையில் இந்தநாட்டில் முஸ்லிம் மக்களை சுதந்திரமாக வாழ வைத்திருக்கிறோம்.

மருதமுனையும் வாழ்ந்து கொண்டிருக்கிறது. வடக்கு-கிழக்கு சம்மந்தமாக பேசுவதாக இருந்தால் எங்களையும் அழைக்க வேண்டும் என்று நாங்கள் சொல்லிக் கொண்டிருக்கின்றோம். ஆனால் அவர்கள் முஸ்லிம் சிறுபாண்மை மக்களை அழிக்கக்கூடிய சட்டமூலத்திற்கு கையுயர்த்திவிட்டு வந்து சிறுபிள்ளைத்தனமாக அவர் உயத்தியதால்தான் நான் உயர்த்தினேன் என்கிறார் ஒருவர். அதற்கு மற்றவர் அவர் சொன்னதால்தான் நான் உயர்த்தினேன் என்று தொலைக்காட்சியல் பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நாங்கள் சொன்னோம் இந்த சட்டமூலம் எங்கள் மக்களை அழிவிற்கு கொண்டு செல்லப்போகிறது. எங்கள் பெண்களின் கலாச்சாரத்தை சீரழிக்கப்போகிறது இதற்கு ஒருபோதும் நாங்கள் துணைபோகமாட்டோம் என்று பகிரங்கமாகச் சொன்னோம்.

ஏனவே மக்களே சிந்தியுங்கள் உங்களுக்கான கடைசித் தருணமிது. இதே போன்றுதான் நான் உங்களுக்கு பிரதேசசபை அல்ல நகரசபை தருகிறேன் என்று கூறினேன் நீங்கள் மறுத்துவிட்டீர்கள். அதேபோன்று இன்றும் சொல்கிறோம் நாங்கள் நியாயமான படித்த பண்புள்ள இளைஞர்களை தெரிவு செய்து போட்டியிடச் செய்துள்ளோம். அவர்கள் உங்கள் பிள்ளைகள் அவர்களுக்கு நீங்கள்தான் வழிகாட்டி நீங்கள்தான் நேரான வழியைக் காட்டவேண்டும்.சரியான நேரத்தில் சரியான முடிவெடுகக்கூடிய நல்லவர்களாக நீங்கள்தான் உருவாக்க வேண்டும். அதனால்தான் இன்று எமது கட்சியில் நல்ல இளைஞர்களை தேர்தலில் நிறுத்தியிருக்கின்றது.

இன்ஷா அல்லாஹ் நீங்கள் இவர்களை வெற்றிபெறச் செய்வது இவர்கள் மாநகரசபைக்கு செல்லவேண்டும் என்பதற்காக அல்ல அவர்கள் உங்களுக்காக போராடுவதற்கும் எமக்கான உரிமைகளை வென்றெடுக்கவுமே நாங்கள் இவர்களைத் தெரிவு செய்துள்ளோம் எனவே இவர்களை வெற்றிபெறச் செய்து நாங்கள் எமக்கான அங்கீகாரத்தை வழங்கி எமக்குக் காலம்காலமாக  துரோகம் செய்யும் இவர்களுக்கு நீங்கள் பாடம் புகட்ட வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.