Header Ads



கொள்ளையர்கள் மட்டுமே இன்று ஆட்சியில் உள்ளனர் - அனுரகுமார

"தத்தமது ஊழல் மோசடிகளை மறைக்கவே மஹிந்த -ரணில்- மைத்திரி மூவரும் முயற்சித்து வருகின்றனர்"  என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக தெரிவித்தார். 

மகரகம பிரதேசத்தில் இன்று -26- இடம்பெற்ற மக்கள் விடுதலை முன்னணியின் மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டே அனுரகுமார திசாநாயக மேற்கண்டவாறு தெரிவித்தார் . அங்கு தொடர்ந்து உரையாற்றிய அனுரகுமார திசாநாயக,

" நாட்டினை கையாள்வதைப்  போலவே ஊரையும் கையாள அனுமதி தாருங்கள் என பிரதான இரண்டு கட்சிகளும் மக்களுக்கு தெரிவித்து வருகின்றது.

நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி கண்டுள்ளது, சர்வதேச ஆதிக்கம் தலைதூக்கியுள்ளது.

இவர்களின் செயற்பாடுகளினால் மக்களுக்கு இன்று அரசியல் வேண்டாம் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அரசியல் கொள்ளையர்கள் மட்டுமே இன்று ஆட்சியில் உள்ளனர்.

இவர்களின் பொருளாதார கொள்ளை மூலமாக எயார்லங்கா நிறுவனம் 12500 கோடி நட்டத்தையும், மத்திய வங்கி களவினால் முதல் ஐந்து மாதங்களில் 1100 கோடிநட்டத்தையும்,பெற்றோலிய கூட்டுத்தாபனம் 1000 கோடி நட்டத்தையும் கண்டுள்ளது.

ஜனாதிபதி ஆசனத்தில் அமரும் போது கூறும் வாக்குறுதியை அல்ல அவரது ஆட்சியில் செய்கின்றார். பிரதமரும் அவ்வாறே!

அனைவருமே இன்று ஊழல்வாத, ஏமாற்று அரசியல் வாதிகளே உள்ளனர்.  இவர்கள் கேட்பதும் உருவாக்க நினைப்பதும் தமது ஊழல் கொள்ளைகளை மறைக்கவும் ஊழல் வாதிகளை காப்பற்றவுமேயாகும்.

மஹிந்த அணியும், ரணில் -மைத்திரி அணியும் தத்தமது ஊழல் மோசடிகளை மறைக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். அதற்காகவே இவர்கள் ஆட்சியினை கைப்பற்ற முயற்சித்து வருகின்றனர்" என தெரிவித்தார் .

No comments

Powered by Blogger.