Header Ads



"தங்களது வாக்கு எண்ணிக்கையை அதிகரித்துக்கொள்ள ஒவ்வொருவரும் திட்டிக் கொள்கின்றனர்"

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணிலும் இணைந்து கொள்வார்கள் என்று அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.

யட்டிநுவர பிரதேசத்தில் இன்றைய தினம் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன் போது, தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

தேர்தலின் போது சிலர் நாம் எதிர்பார்க்காத கருத்துக்களை வெளியிட்டாலும், தேர்தலின் பின்னர் ஜனாதிபதி மைத்திரியும், பிரதமரும் இணைந்து செயற்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தல் காலத்தில் வெளியிடப்படும் கருத்துக்கள் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் பதற்றமடையத் தேவையில்லை.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனித்து போட்டியிடுகின்றது. மகிந்த ராஜபக்ஸ தனித்து போட்டியிடுகின்றார். நாமும் தனித்து போட்டியிடுகின்றோம்.

ஒவ்வொருவரும் தங்களது வாக்கு எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்ள திட்டிக் கொள்கின்றனர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி ஆகிய கட்சிகள் எம்மை திட்டுகின்றனர்.

இதேவேளை, இவை தங்களது வாக்குகளை அதிகரித்துக் கொள்ளும் நோக்கிலானதே தவிர வேறு ஒன்றுமில்லை. எனவே நம்மவர்கள் இதனைக் கண்டு அஞ்சக் கூடாது என்றும் அவர் அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. மனச் சாட்சியுள்ள ஒவ்வொரு இலங்கை வாக்காளரும், தமது ஒவ்வொரு பெறுமதியான வாக்குகளையும், நமக்காகப் போராடுகின்ற, நீதிக்காகப் போராடுகின்ற, சாக்கடை அரசியலுக்கு அப்பாலுள்ள தனித்துவமான அணியை, இவ்வுள்ளுராட்சித் தேர்தல் முதலே பலப்படுத்தி,  2020ல் தேசிய அரசியலில் மாபெரும் மாற்றத்தைக் கொண்டு வர தமது முழுமையான பங்களிப்பைச் செய்ய வேண்டும்.

    இலங்கையரின் விடிவு தமது அறிவுசார்ந்த நல்லெண்ணங்களிலேயே தங்கி உள்ளது.

    ReplyDelete

Powered by Blogger.