Header Ads



ஒட்டகங்களுக்கான அழகிப் போட்டி, வாயை பிளக்கவைக்கும் பரிசுத் தொகை


சவுதி அரேபியாவில் ஆண்டு தோறும் நடத்தப்படும் ஒட்டகங்களுக்கான அழகிப் போட்டியானது இந்த முறையும் களைகட்டத் துவங்கியுள்ளது.

சவுதி அரேபியாவில் மன்னர் அப்துல் அஜீஸ் பெயரில் ஆண்டு தோறும் நடத்தப்படும் ஒட்டக விழாவானது இந்த முறையும் மிக சிறப்புடன் கொண்டாடப்பட்டு வருகின்றது.

இதன் ஒருபகுதியாக 57 மில்லியன் டொலர் பரிசுத் தொகை கொண்ட ஒட்டகங்களுக்கான அழகிப் போட்டியும் நடைபெற்றுள்ளது.

போட்டியில் முதற்பரிசை வெல்லும் ஒட்டகத்திற்கு 30 மில்லியன் டொலர் பரிசுத்தொகை வழங்கப்படும்.

சவுதி பாலைவனத்தில் பிரத்யேகமாக எழுப்பப்பட்டிருக்கும் அரங்கில் ஒட்டகங்களுக்கான போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்த விழாக்களை கண்டுகளிக்க சுமார் 300,000 மக்கள் குவிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே போட்டியில் கலந்துகொண்ட 12 ஒட்டகங்களை விதி மீறல் தொடர்பாக தடை செய்துள்ளனர்.

கடந்த முறை வெளியிட்ட அறிக்கையின்படி, போட்டியில் கலந்துகொள்ளும் ஒட்டகங்களுக்கு போதை மருந்து தருவது, அதன் உடலில் வண்ணம் பூசுவது, முடிகளை மழிப்பது உள்ளிட்டவைகளை அனுமதிக்க முடியாது எனவும் விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


No comments

Powered by Blogger.