Header Ads



டன் பிரசாத்திற்கு வாய்ப்புக்கொடுக்க, UNP வங்குரோத்து கட்சியல்ல - முஜிபுர் ரஹ்மான்

டன் பிரசாத் ஐ.தே.க.யில் போட்டியிட இருப்பதாக வெளியாகியுள்ள தகவல்களின் உண்மையில்லை என மறுத்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், டன் பிரசாத்திற்கு வாய்ப்புக் கொடுக்குமளவு ஐ.தே.க.யில் ஆட்களுக்கு பஞ்சமில்லை எனவும் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

டன் பிரசாத் ஐ.தே.க.யில் எதிர்வரும் உள்ளுராட்சி தேர்தலில் போட்டியிடவுள்ளதாக தகவல்கள் பரவியுள்ளன. இது தவறான தகவல். இதனை நான் பொறுப்புடன் மறுக்கிறேன். ரஞ்சன் ராமநாயக்காவும் இதுதொடர்பில் மறுப்புத் தெரிவிததுள்ளார்.

ஐ.தே.க.யில் ஆட்களுக்கு எந்தப் பஞ்சமும் நிலவவில்லை. எனவே டன் பிரசாத் போன்றவர்களுக்கு இங்கு இடமில்லை. அதனை அனுமதிக்கவும் மாட்டோம். டன் பிரசாத் அந்தளவும் பெரியவனுமல்ல எனவும் முஜிபுர் ரஹ்மான் மேலும் தெரிவித்தார்.

1 comment:

Powered by Blogger.