Header Ads



NFGG யின் 20 வேட்புமனுக்கள் ஏற்பு, 1 நிராகரிப்பு - 8 மாவட்டங்களில் போட்டி


நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG)  தாக்கல் செய்த 21 வேட்புமனுக்களில், 20 வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, 1 வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

உள்ளுராட்சி மன்றங்களில் இரு தொகுதி மன்றங்களுக்குமான வேட்புமனு தாக்கல் முடிவடைந்துள்ள நிலையில், NFGG வேட்புமனு தாக்கல் செய்த, குருணாகல் மாவட்டத்தின் மாஹோ பிரதேச சபைக்கான வேட்புமனு தவிர ஏனைய அனைத்து வேட்புமனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த வகையில், எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில், நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) நாடு முழுவதும் 20 உள்ளுராட்சி மன்றங்களில் போட்டியிடவுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் மூன்று மாவட்டங்களிலுமுள்ள பல உள்ளுராட்சி மன்றங்களிலும், கொழும்பு மாநகர சபை, அத்தனகல்ல பிரதேச சபை, முசலி பிரதேச சபை ஆகிய உள்ளுராட்சி மன்றங்களிலும் போட்டியிடவுள்ளது.

NFGG யின் வேட்பாளர் பட்டியலில்இ முஸ்லிம்இ தமிழ், சிங்கள சமூகங்களைச் சேர்ந்த வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்த வகையில், கொழும்பு மாநகர சபையில் விக்ரமபாகு கருணாரத்னவின் தலைமையிலான நவ சம சமாஜக் கட்சி NFGG உடன் இணைந்துஇ NFGG யின் இரட்டைக் கொடி சின்னத்தில் போட்டியிடுகின்றது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.