Header Ads



மேயர் பதவிக்கு, ஆசாத் சாலி போட்டி - பொரளையில் சாஹுல் ஹமீத்


எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் கொழும்பு மாநகர சபைக்கு ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் மேயர் அபேட்சகராக ரோஸி சேனா நாயக்க போட்டியிடவுள்ளார்.

இதேநேரம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அணிக்கு முன்னாள் பிரதி மேயரும் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவருமான ஆசாத் சாலி போட்டியிடவுள்ளார்.

பொதுஜன பெரமுன சார்பில் மேயர் அபேட்சகராக முன்னாள் மாத்தளை மேயர் ஹில்மி கரீம் அல்லது என்.எம். டிரவல்ஸ் உரிமையாளர் எச்.எஸ். முஹம்மத் போட்டியிடவுள்ளதாக பொதுஜன பெரமுன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

இதேநேம், முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் எம்.சாஹுல் ஹமீத் ஐ.தே.க. சார்பில் பொரளை வட்டாரத்தில் போட்டியிடுவதற்காக தெரிவு சேய்யப்பட்டுள்ளார்.

இவர் ஸ்ரீ.ல.சு.க. அங்கத்தவர் பதவியிலிருந்து ராஜினாமாச் செய்து ஐ.தே.க.வில் இணைந்துள்ளார்.

தெஹிவளை மாநகர சபைக்கு ஐ.தே.க. சார்பில் முன்னாள் அமைச்சர் சுனேத்ரா ஜயசிங்க போட்டியிடவுள்ளார். பொதுசன பெரமுன சார்பில் முன்னாள் மேயர் தனசிறி அமரதுங்க போட்டியிடவுள்ளார்.

Nawamani

No comments

Powered by Blogger.