Header Ads



யாழில் நாளை தேசிய மீலாத் விழா - பணியாளர்களுடன் அமைச்சர் களத்தில்


யாழ்ப்பாணத்தில் தேசிய மீலாத் விழா நாளை (23) சனிக்கிழமை நடைபெறவுள்ள நிலையில் அதன் ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் முஸ்லிம் சமய விவகார அமைச்சு மற்றும் திணைக்களத்தைச் சேர்ந்த 40 பேர் யாழ்ப்பாணத்தில் தங்கிநின்று பணிகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அமைச்சர் ஹலீம் மற்றும் அமைச்சு உயர் அதிகாரிகள் திணைக்கள அதிகாரிகள் என பலர் யாழ்ப்பாணத்தில் முகாமிட்டு தமது பணிகளை துரிதமாக மேற்கொண்டு வருகின்றனர்.

யாழ்ப்பாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை உறுதிப்படுத்தவும், அப்பிரதேசங்களை மேலும் விருத்தியடையச் செய்யும் நோக்குடனும் தேசிய மீலாத் விழா நடைபெறவுள்ள நிலையில் நாடு முழுவதும் பரந்துவாழும் முஸ்லிம்கள் இதில் பங்கேற்குமாறும், தேசிய மீலாத் விழாவை வெற்றிகரமாக நடத்த தமது அமைச்சிற்கும், திணைக்களத்திற்கு முழு ஒத்துழைப்பு நல்குமாறும் அமைச்சர் ஹலீமின் பிரத்தியேகச் செயலாளர் பாஹிம் கோரிக்கை விடுத்துள்ளார்.

1 comment:

  1. May Allah accept your efforts, to Minister Haleem and Mr. Fahim. Once again this Minister will be remembered for regularising Haj and fighting for the Rights of the pilgrims. May Allah reward you for the unadvertised good deeds.

    ReplyDelete

Powered by Blogger.