Header Ads



சவூதி அரேபியா, இஸ்ரேல் மீது போர் தொடுக்குமா..?


-மு.மு.மீ-

அமெரிக்காவின் வைப்பாட்டிக்கு பிறந்த கள்ளக்குழந்தையான இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அறிவித்துள்ளார்  அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.

இதனால் அவருக்கு எதிராக உலகம் முழுவதும் கடுமையாக எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.

டொனால்ட் டிரம்புக்கு சவூதி அரேபியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது பொறுப்பற்ற செயல் என்று விமர்சித்துள்ளது. டொனால்ட் டிரம்பின் அறிவிப்பை உலக நாடுகளும், ஐநா சபையும் அங்கீகரிக்க கூடாது என்றும் கோரியுள்ளது.

இதுசர்வதேச அளவில் நடைபெற்று வரும் நிகழ்வுகளாகும்.

முகநூலில் எப்போதும்போல் சிலர் கிறுக்குவதை போன்று இம்முறையும் கிறுக்கியுள்ளனர்.

சவூதி அரேபியா ஏன் இஸ்ரேல் மீது போர் தொடுக்கவில்லை ? சவூதி அரேபியா மீது ஏன் அமெரிக்கா மீது போர் தொடுக்கவில்லை ? அமெரிக்காவின் அடிமை அரசு சவூதி அரேபியா என்று மீண்டும் கிறுக்க தொடங்கியுள்ளனர். சவூதி அரேபியாவை பற்றி ஒருபுறம் எழுதினாலும் அந்த பதிவுகளில் முகநூல் முஸ்லிம் மீடியாவையும் சேர்த்து எழுதுகிறார்கள்.

இப்படி எழுதக்கூடியவர்களை பார்க்கும்போது அரபுலக அரசியலின் எதார்த்தம் இவர்களுக்கு தெரியவில்லை என்று ஆதங்கப்படுவதை தவிர வேறு ஒன்றும் தெரியவில்லை.

சவூதி அரேபியா உள்ளிட்ட சில அரபு நாடுகள் இரண்டு முறை இஸ்ரேலிடம் போர் நடத்தி தோல்வியை தழுவியுள்ளன.

இரண்டு முறையும் இஸ்ரேலுக்கு அமெரிக்காவே ராணுவ உதவி செய்தது.

இரண்டு முறையும் அரபு - இஸ்ரேலிய போரில் அமெரிக்காவே நாட்டாமையும் செய்தது. இது பழைய வரலாறு,

இன்று உள்ள சூழலில் சவூதி அரேபியா இஸ்ரேலை எதிர்க்கும் அளவுக்கு ராணுவ பலம் உள்ள நாடு என்றாலும், அமெரிக்காவை எதிர்க்கும் அளவுக்கு ராணுவ பலம் இல்லாத நாடாகும்.

மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக சவூதி அரேபியாவின் பொருளாதார சூழல் மந்தமாக இருந்து வருகிறது. இரண்டு ஆண்டுகளாக சவூதி அரேபியாவின் அரசியல் ஸ்திரதன்மையற்ற சூழலில் இருந்து வருகிறது.

இப்படிப்பட்ட சூழலில் சவூதி அரேபியா இஸ்ரேல் என்ற அமெரிக்கா மீது போர் நடத்த நினைத்தாலே அமெரிக்கா சவூதி அரேபியா மீது போரே நடத்தி ஆட்சியையே கலைத்து விடும்.

ஆட்சியாளர்கள் கொல்லப்படுவார்கள். பெண்கள், குழந்தைகள், வயோதிகர்கள் என பொதுமக்கள் கொல்லப்படுவார்கள்.

நாடு முழுவதும் இரத்தக்கிளறியாகும்.

மேலும் ஆட்சியை ஈராக், லிபியாவில் ஷியாவிடம் ஒப்படைத்து பொம்மை அரசை நிறுவியதை போல் சவூதி அரேபியாவிலும் ஷியாவிடம் ஆட்சியை ஒப்படைத்து பொம்மை அரசை அமெரிக்கா நிறுவும்...

மக்கா, மதினா ஷியாவுடைய கட்டுப்பாட்டுக்கு போகும்.

இப்போது சவூதி அரேபியா முழுவதும் தவ்ஹீத் கொள்கையில் சென்று கொண்டிருக்கிறது. ஷியாவுடைய ஆட்சி வந்தால் ஷிர்க், பித்அத் பெருகும்...

நிறைய மாறுதல்கள் ஏற்படும். கோடிக்கணக்கான வெளிநாட்டு தொழிலாளர்களின் வாழ்க்கை பாதிக்கும்.

ராணுவ பலம் இல்லாதது யாருடைய தவறு ?

100 ஆண்டுகளுக்கு முன்புவரை சவூதி அரேபியாவுக்கு மற்ற நாடுகளை பிடிக்க வேண்டும் என்றோ அல்லது அமெரிக்கா, ரஷ்யா போன்ற பிறமத நாட்டினர் சவூதி அரேபியாவை பிடிக்க வேண்டும் என்றோ எந்த தேவையும் இல்லாததால் சவூதி அரேபியாவுக்கு ராணுவ பலம் தேவையில்லாமல் இருந்தது.

துருக்கியை சேர்ந்தவர்கள் மக்கா, மதீனாவை கைப்பற்றி ஆட்சி செய்து வந்தார்கள். அவர்கள் ஆட்சி செய்த போது பத்ரு போர், உஹது போர் நடந்த இடங்களில் நூற்றுக்கணக்கான தர்காக்களை கட்டிவைத்தார்கள். மக்காவில் நான்கு மத்ஹபுகளை சேர்ந்தவர்கள் தொழுவதற்கும் நான்கு தனி தனி தொழுகையிடங்களை அமைத்து வைத்திருந்தார்கள்.

முஹம்மது பின் அப்துல் வஹ்ஹாப் மற்றும் சவுத் குடும்பம் இணைந்து துருக்கியர்களை அடித்து விரட்டினார்கள். நூற்றுக்கணக்கான தர்காக்களை இடித்து தரைமட்டமாக்கினார்கள். மக்காவில் ஒரே தொழுகையை ஏற்படுத்தினார்கள்.

அப்போதுதான் சவூதி அரேபியா என்று பெயர் மாற்றப்பட்டது. அப்போது தான் பெட்ரோல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

பெட்ரோல் இருப்பதை கண்டு பிடித்தது அமெரிக்கா, பெட்ரோலை எடுத்தது அமெரிக்கா, பெட்ரோலை சுத்தீகரித்தது அமெரிக்கா, பெட்ரோலை உலக மார்கெட்டுக்கு கொண்டு சென்றது அமெரிக்கா, பெட்ரோலை டாலரில் விற்று தமக்கு தேவையான பில்லியன் டாலர்களை எடுத்துக்கொண்டு ரியாலை சவூதியிடம் கொடுத்தது அமெரிக்கா...

அமெரிக்காவும், பிரிட்டனும் இணைந்தே சவூதி அரேபியாவை உயரத்திற்கு கொண்டு வந்தார்கள்.

இந்த 100 ஆண்டுகளில் சவூதி அரேபியாவுக்கான ராணுவ தளவாடங்கள் அமெரிக்கா மற்றும் பிரிட்டனிடமிருந்து பில்லியன் டாலர்களில் வாங்கி குவிக்கப்பட்டது.

G20 நாடுகளில் சவூதியும் இடம் பெற்றது. ஐநாவில் சவூதி அரேபியாவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

உலகின் எங்கு இயற்கை சீற்றம் ஏற்பட்டாலும் உடனே சவூதி அரேபியா மில்லியன் கணக்குகளில் மனிதநேய உதவி செய்தது.

அரபுலகின் ஹீரோவாகவும், உலக அரங்கில் முக்கிய நபராகவும் சவூதி அரேபியா தனித்து விளங்கி வருகிறது.

இந்நிலையில் சவூதி அரேபியாவை அமெரிக்காவுக்கு எதிராக போர் செய்யுங்கள் என்றால் எப்படி சாத்தியமாகும் ?

மன்னர் அப்துல்லாஹ் இறந்தபிறகு புதிய மன்னராக சல்மான் ஆட்சி பொறுப்பேற்றார்.

அந்த கட்டத்தில் ஈரான் மீதான பொருளாதார தடையை அமெரிக்கா நீக்கியது மற்றும் ஐ.எஸ்.தீவிரவாதிகள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் எடுக்கப்படும் பெட்ரோல் கள்ள மார்கெட்டில் விற்கப்பட்டது போன்ற இன்னும் சில காரணங்களால் உலகளவில் பெட்ரோலின் விலை பாதிக்கும் கீழாக வீழ்ச்சியடைந்தது.

இதனால் புதிதாக ஆட்சி பொறுப்பேற்ற சல்மானுடைய அமைச்சரவை பேரதிர்ச்சியடைந்தது.

சவூதியில் 4 கோடி மக்கள் வாழ்ந்தாலும் பரப்பளவில் மிகப்பெரிய நாடு என்பதால் மிகப்பெரிய அளவில் செலவு கொண்ட நாடாகும்.

2017 ஆம் ஆண்டு சவூதி அரேபியாவின் செலவுக்கான பட்ஜெட் 890 பில்லியன். 50 சதவீதம் பெட்ரோல் மூலம் வருமானம் வந்துள்ளது. 25 சதவீதம் இதர தொழில் நிறுவனம் மூலம் வருமானம் வந்துள்ளது. மீதி 25 சதவீத செலவுக்கு வருமானம் இல்லாமல் சவூதி அரேபியா திண்டாடி வருகிறது.

இதனாலேயே வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு, விலைவாசி உயர்வு, வரி ஏற்றம், இக்காமா, விசா போன்றவற்றில் விலை ஏற்றம் என அடுத்தடுத்த அறிவிப்புகளை அரசு வெளியிட்டு வருகிறது.

மன்னர் சல்மானின் மகன் இளவரசர் முஹம்மது பின் சல்மான் சவூதி அரேபியாவின் வருமானத்திற்கு பெட்ரோல் இல்லாமல் மற்ற திட்டங்கள் மூலமாக வருமானம் ஈட்ட தொடர்ச்சியாக கவனம் செலுத்தி வருகிறார். 2030 ஐ இலக்காக வைத்து திட்டங்கள் வகுத்துள்ளார்.

மேலும் ராணுவ பொருட்கள் வெளிநாட்டிலிருந்து விலை கொடுத்து வாங்காமல் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய நிறைய வரைவுகள் வகுத்துள்ளார்.

முதலில் 2030 க்குள் சவூதிக்கான வருமானத்தை உருவாக்குவார்கள். அதன்பிறகு ராணுவ பொருட்களை உள்நாட்டிலேயே தயாரித்து தம்முடைய சொந்தக்காலில் நிற்பார்கள்.

19 comments:

  1. Writer 0f this article has misconception or pretending to b ignorant of mood and the outcry of our Umma against Israhell and America . International Community is fuming with rage against the unilateral proclamation of Jerusalem to b the capital of Israhell., In the recent past the reaction of Saudi in relation to Israhell savage atrocities in Palestine has been too little too late when compared to some non Muslim countries . To call a spade a spade Saudi has been following a policy of appeasement just not to offend or so to say soft paddling raising its voice only after much hue and cry of other Muslim countries . Dragging the past of Turkey regime building shrines in Macca n Madina is out of context . May b the fact that Turkey has been in the frontline in every crisis The Muslims has been facing even in the Rohingiya massacre . The role of Saudi has been abysmally miserably extremely far behind very reluctantly joining the chorus . May b Its foreign policy has been dictated by a pro American n Israhell . just softpaddling not tp offend western allies. No body expects Saudi to Invade America or Israhell let alone taking a drastic action. Sad to say credibility of Saudi regime Salman n Co has gone to dogs .with Umma looking up towards Turkey which has been roaring against the injustice to Muslims ,its image shooting uo to the sky . What we Ummah expect the Saud is to do the minimum raising its voice at appropriate time at proper forums . Saudi has been losing its image of conventional spokesman champion of Umma being reduced to conventional guardian of holy Macca n Madeena These playboy princes and monarch are preoccupied with infighting n pleasing their western allies. Very pathetic ground realities. Role of Saudi following Rohingiya attrocities is a clear yardstick where The House of Saudi is heading to. Salman n Co hopeless guys reaching the scene after last Muslim annihilated with the promise to cover funeral expenses . Highly preposterous.

    ReplyDelete
  2. Wahabis are agents of Isreal and US and West. How do you expect to clash with them..
    Saudi and SISI with help of Isreal are killing are Hamas..
    What do you expect then

    ReplyDelete
    Replies
    1. Saudi mutawa atiri article pottollar

      Delete
    2. Abu Ateeq உங்கள் ஷீயா மத குர்ஆனில் இது பற்றி ஏதும் வந்துள்ளதா?

      Delete
  3. பதிவு நடுநிலையாக இருக்க வேண்டும்,,, 100% சவுதிக்கு ஜால்ரா அடிப்பதாக இருக்க கூடாது,,,

    ReplyDelete
  4. ஏற்கவேண்டிய உன்மை. انشا الله எதிர்காலம் சிறக்க அல்லாஹ்வை பிரார்த்திப்போம். விதண்டாவாதிக்காமல்.

    ReplyDelete
  5. எதார்தமான பதிவு

    ReplyDelete
  6. எழுத்தாளர் மிகவும் ஷூட்ஷுமமாக சவூதி அராபிய அல்லது பின் சல்மான் அராபியாவுக்கு வக்காலத்து வாங்குகிறார்போலும் ...உலக அரங்கில் நடைபெறுபவை உங்களது ஊகம்களுக்கு மிகவுமே அப்பால் .....

    ReplyDelete
  7. yes this is the real story

    ReplyDelete
  8. Nonsense article. The contents have hardly any relevance to the Subject. People are confused due to current political developments weather to defend the Wahhabism/Salafism followed by the Saudi regime or to support Turkey who is spearheading the causes for muslims.

    ReplyDelete
  9. எழுத்தாளருக்கு இஸ்லாமிய உலகை பற்றிய போதிய அறிவு இல்லபோல. இதை பார்த்தால் சவுதிக்கு ஜால்ரா தூக்குராறு. இஸ்ரேல் உருவாவதற்கும் யூதர்களை பாலஸ்தீனத்தில் குடியமர்துவதுக்கும் பிரித்தானியாவுடன் சேர்ந்து இஸ்லாத்துக்கு துரோகம் செய்தது இந்த சவுத் குடும்பம்தான். சுமார் 600 வருடங்கள் இஸ்லாமிய உலகை ஆட்சி செய்த உஸ்மானிய கிலாபாத்தை விமர்சிக்கும் இவர் இஸ்லாமிய வரலாற்றை முதலில் படிக்க வேண்டும். சுல்தான் முஹம்மத் அல் பாதியை பற்றி நபியவர்கள் முன்னறிவுப்பு செய்த வரலாற்றை இவருக்கு தெரியாது போல.
    “Verily you shall conquer Constantinople. What a wonderful leader will he be, and what a wonderful army will that army be!”

    Narrated from Bishr al-Khath`ami or al-Ghanawi by:
    Ahmad, al-Musnad 14:331 #18859 [sahih chain according to Hamza al-Zayn] al-Hakim, al-Mustadrak 4:421-422 [sahih according to him and al-Dhahabi concurred] al-Tabarani, al-Mu`jam al-Kabir 2:38 #1216 [sahih chain according to al-Haythami 6:218-219] al-Bukhari, al-Tarikh al-Kabir 2:81 and al-Saghir 1:306 Ibn `Abd al-Barr, al-Isti`ab 8:170 [hasan chain according to him] al-Suyuti, al-Jami` al-Saghir [sahih according to him]

    ReplyDelete
  10. சத்தியத்தை சொன்னால் இஸ்லாமிய உலகைப் பற்றி போதிய அறிவு இல்லை என்று சிலர் சொல்வார்கள்.
    காரணம் சவூதியில் அவர்களின் போலி இயக்கங்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது

    ReplyDelete
  11. What truth idiot you are talking ..
    You are really ready to give away third most Islamic mosque to jews and now what truth you have..
    You have become agents of كفار and Allah warned you يا أيها الذين آمنوا لا اتخذوا اليهود والنصارى اولياء..
    How many times Allah warn you still you say you are with truth.
    What truth Saudi has got ..
    After selling out all Muslim world and made it as slave to west .
    After buying all crosses of Jesus with 450m.
    Killing millions of children in yemon.
    As phroah did in Egypt.
    What you talk about Saudi.
    They created their Islam.
    Now some Muslim clerics says that optional hajja and ummarah is haram now .
    Why should give money to Saudi to help out jews .
    This year's call is to boycott all optional ummarah and second time hajj

    ReplyDelete
  12. Saudi Arabia has done a lot to the Muslim ummah but their political leadership is not based on Islamic ways. Politics has become a family business to them. Even for Myanmar they have done alot. Unstable political decisions and inter GCC issues like Qatar crisis has made people to think that Saudi is going in the wrong direction.

    ReplyDelete
  13. உம்போன்ற வைரஸ்களுக்கு ஸலபி ஆண்டிபயாடிக்தான் சரிப்பட்டு வரும்.

    ReplyDelete
  14. போர் தொடுக்க தேவை இல்லை அதுக்கான பலமும் உங்களிடம் இல்லை என்பது தெரியும், அமெரிக்கா இஸ்ரேல் னுடைய உட்பதியை முதலில் தடை செய்யுங்கள் பாக்கலாம்

    ReplyDelete
  15. கண் திறப்பார்களா ....வக்காளத்து வாங்கும் மதிப்பிற்குரிய சகோதரர்கள்.

    57 நாடுகளின் பங்களிப்புடன் முஸ்லீம் நாடுகளின் ஒன்றியத்தின் (OIC) கூட்டம் நேற்று அதன் வரலாற்றில் முதன்முறையாக நல்ல பல முடிவுகளுடன் நடந்துள்ளது.
    19 நாடுகளின் தலைவர்கள் பங்குபற்றிய இந்த அமரவில் அமர்வில் சல்மான் அராபியாவில் இருந்து குறிப்பிட்டு சொல்லும்படியான மன்னரோ, வெளிநாட்டு அமைச்சரோ கலந்துகொள்ளவில்லை.
    அதனையும் விட ஆச்சரியமான செய்தி இன்றைய யஹூதிகளின் website/ பத்திரிகைகள் கூட IOCயின் முடிவுகளை சுமந்துவரும் நிலையில் சல்மான் அராபியாவின் உத்தியோக பூர்வா அரபினிவ்ஸ் (arab news )இல் அப்படி ஒன்று நடந்ததாகவே காணவில்லை ...
    அவர்கள் இஸ்ரவேலுக்கு 40 பஹ்ரேனிய சமாதான புறாக்களை (ஷீயாக்கள் உள்ளடங்கலாக) அனுப்புவதில் பிஸி போல ...
    தயவுசெய்து இதனையும் நியாயப்படுத்தாதீர்கள் .......

    ReplyDelete

Powered by Blogger.