Header Ads



அத்தியவசியப் பொருட்களின், விலைகள் குறைப்பு (பட்டியல் இணைப்பு)

அத்தியவசியப் பொருட்கள் சிலவற்றின் விலைகளை குறைக்க இலங்கை சதோச நிறுவனம் தீர்மானித்துள்ளது.  இதற்கமைய, நாடளாவிய சதோச நிலையங்களில் குறித்த பொருட்களை எந்தவித பற்றாக்குறையும் இன்றி பெற்றுக் கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதன்படி, வௌ்ளைப் கெக்குளு ஒருகிலோ 65 ரூபாவில் இருந்து 62 ரூபாவாகவும், 

நாட்டரிசி ஒரு கிலோ 74 ரூபாவில் இருந்து 70 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளது. 

78 ரூபாவாக இருந்த பொன்னி சம்பா அரிசி ஒருகிலோ 71 ரூபாவாக

, 107 ரூபாவாக இருந்த ஒரு கிலோ சீனி 100 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது. 

பெரிய வெங்காயம் ஒருகிலோ 152 ரூபாவில் இருந்து 135 ஆகவும், 

டின் மீன் (425 கிராம்) 149 ரூபாவில் இருந்து 127 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளது. 

பாஸ்மதி ஒருகிலோ 132 ரூபாவாகவும், 

வௌ்ளைப்பூடு ஒருகிலோ 250 ரூபாவாகவும் 

விற்பனை செய்யப்படவுள்ளது.

No comments

Powered by Blogger.