Header Ads



கல்பிட்டி நகரசபையாக தரமுயத்துதலும், புதிதாக கல்பிட்டி அக்கறைப்பற்று பிரதேச சபை உருவாக்கமும்.

கல்பிட்டியை நகரசபையாக தரமுயத்தலும் , புதிதாக கல்பிட்டி அக்கறைப்பற்று பிரதேச சபையை உருவாக்கு முகமான முன் மொழிவுகள்.இன்று கல்பிட்டி பிரதேச சபை செயலக மேல்மாடியில் நடைபெற்றது. இதன்போது பலதரப்பிலான அரசியல் பிரமுகர்களும் , சிவில் தரப்பினர்களும், தனிநபர்களும் முன்மொழிவுகளையும். எழுத்துமூலமான ஆவணங்களையும் சமர்ப்மாபித்தார்கள்.

இதன்போது புத்தள வாழ் சிவில் சமூக ஒன்றியத்தாலும் ஆவணம்கையளிக்கப்பட்டது.     

நகர1987 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க உள்ளூராட்சி மன்ற சட்டத்தின்2 (1) சஷரத்திற்கு அமைவாக  புதிய பிரதேச சபையை உருவாக்கல் , தரம் உயர்த்துதல் , எல்லைகள நிர்ணயம் செய்தல் ,புதிய பிரதேச சபைக்குரிய உறுப்பினர்களை தீர்மானித்தல் போன்ற முன்மொழிவுகளை வட மேல் மாகாணசபையின் முதலமைச்சின் செயளாலர் எம்.ஏ.பி.வீ. பண்டாரநாயக்காவின் தலைமையில் ஐவரைக்கொண்ட குழுவை அமைத்துள்ளது.  

இவ்வாறான காலகட்டத்தில் கல்பிட்டி பிரதேச சபையை 2006  ஆம் ஆ்ண்டில் நாற்பதாயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் சனத்தொகையைக் கொண்ட பின்தங்கிய பகுதியை அபிவிருததி செய்யும் நோக்கில் கடையாமோட்டையை தளமாகக்கொண்ட ஒரு புதிய பிரதேச சபையை உருவாக்கவேண்டிய அவசியத்தை மாகாணசபை ஏற்றுக்கொணடது முக்கிய விடயமாகும்.

அத்துடன் இப்பிரதேச சபையை உருவாக்கவேண்டி அன்றைய மாகாணத்தின் முதலமைச்சரும் ,மாகாணத்தின் பிரதம செயலாளரும் மத்திய அரசுக்கு தனித்தனியாக சிபாரிசினை வழங்கியது முக்கிய விடயமாகும் .எனவே  11 வருடங்களாக முன்மொழிவுக்கு வங்கியும் இன்றுவரையில மத்திய அரசினால் கிடப்பில் இரக்கும் இவவிடயத்தை நல்லாட்சி அரசு விசேட கவனம் செலுத்தி பாதிக்கப்பட்ட பின்தங்கிய எமது மக்களுக்கான உரிமையிைனை பெற்றுத்தருமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.  

புத்தளமாவட்டத்திலே  கூடுதலான மக்கள் சனத்தொகையையும் வாக்காளர்களையும் கொண்டது பகுதியாக கல்பிட்டி பிரதேச சபையாகவும் பிரதேச செயலகமாகவும் விளங்குவது முக்கியவிடயமாகும் . 

எனவே கல்பிட்டியை நகர சபையாக தரமுயர்த்தியம் புதிதாக  கடையாமோட்டையை தளமாக்கொண்டு கல்பட்டி அக்கரைப்பற்று பிரதேச சபையை புதிதாக உருவாக்கித் தருமாறு வேணடுகின்றோம்.

2017 இல் வாக்காளர்கள் 69613     .             2012 சனத்தொகை கணப்பீட்டின் படி மக்கள்தொகை     125 308                      (   கல்பிட்டி பிரதேச செயலகமும் 86019 முந்தல் பிரதேச செயலகமும் 39 289 ) ஆகும்.             

புத்தள வாழ் சிவில் சமூகம்.    இணைப்புச் செயலாளர்             எம் எச் பைறூஸ். இதற்கான முன்மொழிவு மனுவை  சமர்ப்பித்துள்ளார்.  மாஷா அல்லாஹ் .    

தகவல்                        ( இணைத்தலைவர் அப்துல் மலிக்)

No comments

Powered by Blogger.